கோவிஷீல்ட் தடுப்பூசி புதிய உருமாறிய கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கிறது: CCMB தகவல்!

கோவிஷீல்ட் தடுப்பூசி

இந்தியர்களுக்கு வழங்கப்படும் இரண்டு தடுப்பூசிகளில் ஒன்றான கோவிஷீல்ட் புதிய வகை உருமாறிய கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க வல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
கொரோனா வைரஸ் இந்தியாவில் முன்பை விட அதிகரித்து வருகிறது.  ஏனெனில் தினசரி புதிதாக பதிவு செய்யப்படும் கொரோனா பாதிப்புகள் 3 லட்சத்தையும் தாண்டி செல்கின்றன. மேலும் அவற்றில் பெரும்பாலானவை புதிய உருமாறிய கொரோனா என கூறப்படுகிறது. இந்தியாவில் கடந்த மாதம் சேகரிப்பட்ட மாதிரிகளில் புதிய ‘இரட்டை பிறழ்வு’ திரிபு கொண்ட கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.

இரண்டு பிறழ்வுகள் ஒன்றாக இணைந்து வந்துள்ள இந்த திரிபு மிகவும் பயங்கரமானதா?, தடுப்பு மருந்துகளால் பாதிப்பு குறைவாக உள்ளவையாக இருக்கக்கூடியதா? என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

எல்லா வைரஸ்களை போலவும், ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் செல்லும் போது, கொரோனா வைரஸும் தொடர்ந்து சிறு, சிறு வகையில் மாறி வருகிறது. இத்தகைய பிறழ்வுகள், பெரும்பாலும் பின்விளைவுகள் இல்லாமலும், பொதுவாக அந்த வைரஸ் செயல்படும் தன்மையில் பெரிய மாற்றத்தை உருவாக்காதவையாகவே இருக்கும். இருப்பினும் இந்த புதிய இரட்டை திரிபு வைரஸ் பாதிப்பு மேலும் அதிகரித்து வருவதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

இந்த தொற்றுநோய்களுக்கு மத்தியில், ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்கள் அல்லது தடுப்பூசி பெற திட்டமிட்டுள்ளவர்கள், இந்த புதிய நாவல் கொரோனா வைரஸிலிருந்து தடுப்பூசிகள் நம்மைக் காப்பற்றாதோ என்று அஞ்சுகிறார்கள். இந்த நிலையில், செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குனர் ராகேஷ் மிஸ்ரா என்பவர், இந்தியர்களுக்கு வழங்கப்படும் இரண்டு தடுப்பூசிகளில் ஒன்றான கோவிஷீல்ட் புதிய பிறழ்விலிருந்து மக்களை பாதுகாக்க வல்லது என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், மிஸ்ரா ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். அதில், “ஆரம்ப சோதனையில் மிகவும் ஊக்கமளிக்கும் முடிவு: கோவிஷீல்ட் B1617 வைரசுக்கு எதிராக மக்களை பாதுகாக்கிறது. விட்ரோ நியூட்ரலைசேஷன் மதிப்பீட்டைப் பயன்படுத்தி வெளியான ஆரம்ப முடிவுகள், சுறுசுறுப்பான செரா மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசி ஆகிய இரண்டும் பி.1.617 மாறுபாட்டிலிருந்து பாதுகாப்பை வழங்குகின்றன. #டபுள் மியூட்டண்ட்” என்று குறிப்பிட்டிருந்தார்.



இந்த முடிவுகள் ஆரம்பகட்ட சோதனையில் இருந்தே பெறப்பட்டது. எனவே இதனை மிக உறுதியாக கூறமுடியாது என்று கூறிய மிஸ்ரா, இறுதிக்கட்ட சோதனைகள் முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும், தடுப்பூசியின் திறன்களில் நம்பிக்கையை வளர்ப்பதற்கு இந்த ஆரம்ப முடிவுகள் உதவுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோவாக்சின் எவ்வாறு செயல்படுகிறது?

இரட்டை மாற்றத்திற்கு எதிராக நேர்மறையான பதிலைக் காண்பிப்பது கோவிஷீல்ட் மட்டும் தான் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால் அது தவறு. கோவாக்சின், இந்தியர்களுக்கு அளிக்கப்படும் இரண்டாவது தடுப்பூசி ஆகும். இந்த தடுப்பூசியும் இரட்டை-திரிபு கோவிட் மாறுபாட்டை வெற்றிகரமாக நடுநிலையாக்கும் திறன் கொண்டது. இதனை ஐ.சி.எம்.ஆர் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், கோவாக்சின் SARS-CoV-2 இன் பல வகைகளுக்கு எதிராக செய்யப்பட்டு அவற்றை நடுநிலைப்படுத்துகிறது என்றும் இரட்டை திரிபு விகாரத்தையும் திறம்பட நடுநிலையாக்குகிறது என்றும் குறிப்பிட்டிருந்தது.

மேலும் படிக்க... COVID-19 Vaccine in India | இந்தியாவின் கோவாக்சின் 617 வகையான கொரோனா வகைகளை வீரியமிழக்கச் செய்கிறது: அமெரிக்க மருத்துவ நிபுணர் டாக்டர் பாஸி கண்டுபிடிப்பு

B 1.617 என்று அழைக்கப்படும் இந்த புதிய மாறுபாடு இந்தியாவில் முதன்முதலில் E484Q மற்றும் L452R ஆகிய இரண்டு பிறழ்வுகளுடன் கண்டறியப்பட்டது. இந்த பிறழ்வு கடந்த ஆண்டு பிற்பகுதியில் இந்தியாவில் ஒரு விஞ்ஞானியால் அறிவிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பான விவரங்கள் உலக சுகாதார அமைப்பின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக உலக சுகாதார நிறுவனத்தில் சுகாதார அவசரகால திட்டத்தின் ஒரு அமெரிக்க தொற்றுநோயியல் நிபுணர் மரியா டிஜோசெப் வான் கெர்கோவ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: