மாநிலங்களுக்கான கோவிஷீல்டு மருந்தின் விலை அதிரடியாக குறைப்பு!

மாநில அரசுகளுக்கான கோவிஷீட்டு தடுப்பு மருந்தின் விலை 400 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக  குறைக்கப்படுவதாக சீரம் நிறுவனத்தின் தலைவர்  ஆதார் பூனாவாலா அறிவித்துள்ளார்

மாநில அரசுகளுக்கான கோவிஷீட்டு தடுப்பு மருந்தின் விலை 400 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக  குறைக்கப்படுவதாக சீரம் நிறுவனத்தின் தலைவர்  ஆதார் பூனாவாலா அறிவித்துள்ளார்

  • Share this:
    மாநில அரசுகளுக்கான கோவிஷீட்டு தடுப்பு மருந்தின் விலை 400 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக  குறைக்கப்படுவதாக சீரம் நிறுவனத்தின் தலைவர்  ஆதார் பூனாவாலா அறிவித்துள்ளார்.

    இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தினசரி பாதிப்பு, 3 லட்சத்தை  தாண்டியுள்ள நிலையில், பொதுமக்களுக்கு  கொரோனா தடுப்பூசி  செலுத்தும் பணியை மத்திய , மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

    தற்போது, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

    மே 1ம் தேதி முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த இரண்டு தடுப்பூசிகளும் மத்திய அரசுக்கு  ஒரு டோஸ்  150 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.  கோவாக்சின் தடுப்பூசி  மாநில அரசுகளுக்கு 600 ரூபாய்க்கும் தனியார் நிறுவனங்களுக்கு 1200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

    இதேபோல், கோவிஷீல்டு மருந்தின் விலையும் அண்மையில் அதிகரிக்கப்பட்டது. அதன்படி, மாநிலங்களுக்கு 400 ரூபாய்க்கும்  தனியார் நிறுவனங்களுக்கு  600 ரூபாய்க்கும் விற்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இதற்கு  மாநில அரசுகள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தடுப்பூசியின் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.  தடுப்பூசிக்கு வெவ்வேறு விலை நிர்ணயம் செய்யப்படுவது தொடர்பாக உச்ச நீதிமன்றமும் மத்திய அரசிடம் விளக்கம் கோரியிருந்தது.

    இந்நிலையில், மாநில அரசுகளுக்கான கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் விலையை சீரம் நிறுவனம் குறைத்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர்  ஆதார் பூனாவாலா தனது டுவிட்டர் பக்கத்தில், மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில், மாநில அரசுகளுக்கான தடுப்பூசியின் விலை  400 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    இந்த  நடவடிக்கை மாநில  அரசுகளின் கோடிக்கணக்கான நிதியை மிச்சப்படுத்தும் என்றும்  அதிக தடுப்பூசிகளை வாங்கவும், எண்ணற்ற உயிர்களை காப்பாற்றவும் உதவும் என்றும் ஆதார் பூனாவாலா கூறியுள்ளார். இந்த விலை குறைப்பு அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: