Covishield : கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் - ஆய்வில் தகவல்

கோவிஷீல்டு

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் அங்கீகாரம் வழங்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது 16 ஐரோப்பிய நாடுகள் அங்கீகரித்துள்ளன.

  • Share this:
    சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து ஒருவரின் வாழ்நாள் முழுவதும் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரித்து வருகிறது. இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் இந்த மருந்தை தயாரித்து, மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கோவிஷீல்டு மருந்தின் செயல்பாடுகள் குறித்து இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இதில், கோவிஷீல்டு தடுப்பு மருந்து, கொரோனா வைரஸ்க்கு எதிராக எதிர்ப்பு அணுக்களை உருவாக்குவதோடு, ஒருவரின் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் அங்கீகாரம் வழங்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது 16 ஐரோப்பிய நாடுகள் அங்கீகரித்துள்ளன. எனவே இரண்டு, டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அந்த நாடுகளுக்குள் நுழைய தடை ஏதும் இல்லை என சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவாலா கூறுகையில், ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, பின்லாந்து, ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அயர்லாந்து, லாட்வியா, நெதர்லாந்து, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, இரண்டு டோஸ் கோவிஷீல்டு போட்டுக் கொண்டவர்கள் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்குள் நுழைய தடை ஏதும் இல்லை.

    Must Read : இந்தியாவில் 18 வயது பிரிவினருக்கு செலுத்த எத்தனை கோடி ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி தேவை?

    வெளிநாட்டு பயணிகர், தங்கள் நாடுகளுக்குள் நுழைய ஒவ்வொரு நாடும் வெவ்வேறு விதமான விதிமுறைகளை பின்பற்றுகின்றன. பயணியர் அதை கவன முடன் அறிந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    இந்நிலையில், பைஸர், மாடர்னா மற்றும் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகளின் இரண்டு டோஸ் போட்டு கொண்டவர்கள், பிரான்ஸ் நாட்டிற்குள் நுழைய பரிசோதனை தேவையில்லை என, அந்த நாடு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் அங்கீகாரம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: