கொரோனா தொற்றாளர்கள் இல்லாத பச்சை மண்டலமாக மாறிய திருப்பூர்!

கடந்த 10 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

கொரோனா தொற்றாளர்கள் இல்லாத பச்சை மண்டலமாக மாறிய திருப்பூர்!
(கோப்புப் படம்)
  • Share this:
ஈரோடு, சிவகங்கை மாவட்டங்களை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் கொரோனா தொற்றாளர்கள் இல்லாத பச்சை மண்டலமாக மாறியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், திருப்பூரில் மே 2ம் தேதி புதிதாக இரண்டு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கடந்த 10 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத நிலையில், சிகிச்சை பெற்று வந்த இருவரும் இன்று குணமடைந்து வீடு திரும்பியதால் திருப்பூர் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளதாக ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.Also see:
First published: May 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading