முகப்பு /செய்தி /கொரோனா / கொரோனா உயிரிழப்புகளில் 3-வது இடத்தில் மெக்சிகோ: ஒரேநாளில் 688 பேர் உயிரிழப்பு - சர்வதேச நிலவரம் என்ன?

கொரோனா உயிரிழப்புகளில் 3-வது இடத்தில் மெக்சிகோ: ஒரேநாளில் 688 பேர் உயிரிழப்பு - சர்வதேச நிலவரம் என்ன?

கொரோனா: மெக்சிகோவில் 4.24 லட்சம் பேர் பாதிப்பு, 46,688 பேர் உயிரிழப்பு (படம்: Reuters)

கொரோனா: மெக்சிகோவில் 4.24 லட்சம் பேர் பாதிப்பு, 46,688 பேர் உயிரிழப்பு (படம்: Reuters)

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள 3வது நாடாக மெக்சிகோ உருவெடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது. உலகில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 289000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.77 கோடியாக அதிகரித்துள்ளது.

அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 4.24 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மெக்சிகோவில், வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 688 பேர் உயிரிழந்ததை அடுத்து, மொத்த உயிரிழப்பு 46,688ஆக அதிகரித்துள்ளது.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 6வது இடத்தில் உள்ள மெக்சிகோ, அதிகம் உயிரிழப்புகளைச் சந்தித்துள்ள 3வது நாடாக மாறியுள்ளது. அதிக உயிரிழப்புகளைச் சந்தித்த 3வது நாடாக இருந்த பிரிட்டனில், 46,204 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. எனினும் பிரிட்டன் பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 11வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 3வது இடத்தில் உள்ள இந்தியா, உயிரிழப்பு எண்ணிக்கையில் 5வது இடத்தில் உள்ளது. உலக அளவில் 3.84 விழுக்காடாக உள்ள உயிரிழப்பு விகிதம், இந்தியாவில் 2 .15 விழுக்காடாக உள்ளது. இதுவே அமெரிக்காவில் 3.33 விழுக்காடாகவும், பிரேசிலில் 3.4 விழுக்காடாகவும் உள்ளது.

ஆனால் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மெக்சிகோவில் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 10.99 விழுக்காடாகவும், பிரிட்டனில் 15.2 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது.

First published:

Tags: CoronaVirus, Mexico