சுகாதார அமைச்சகத்தை சேர்ந்தவர்கள் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்வார்களா? - மருத்துவ சங்கத்தின் 5 கேள்விகள்

கொரோனா சிகிச்சை மற்றும் நோய் தடுப்பு ஆயுஷ் அமைச்சகத்துக்கே கொடுப்பதிலிருந்து சுகாதாரத்துறை அமைச்சரை எது தடுக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளது இந்திய மருத்துவ சங்கம்..

சுகாதார அமைச்சகத்தை சேர்ந்தவர்கள் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்வார்களா? - மருத்துவ சங்கத்தின் 5 கேள்விகள்
சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்
  • Share this:
COVID-19-க்கான ஆயுஷ் தரநிலை சிகிச்சை நெறிமுறையைத் தொடங்குவதற்கு அனுமதி அளித்திருக்கும் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனிடம், இந்திய மருத்துவ சங்கம் (IMA) தனது கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. "அவர் (ஹர்ஷ் வர்தன்) தனது ஆயுஷ் ஆயுர்வேத சிகிச்சைக்கு ஆதரவாக நிறுவனங்களின் சுவாரஸ்யமான பெயர்களை கோடிட்டு காட்டுகிறார். இவை அனுபவச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்,  சான்றுகள் தனிப்பட்ட அனுபவம் மற்றும் தனிப்பட்ட அகநிலை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை என்று அவர் ஒப்புக்கொள்கிறார். ஆகவே விஞ்ஞான நீதியில் நிரூபிக்கப்படாமல் ஒரு சிகிச்சை முறை அனுபவத்தில் அடிப்படையில் ஆனதாக இருக்கலாமா? அவர் சில கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில், அவர் தேசத்தில் மக்களை ஆபத்தில் தள்ளுகிறார் என்பதாக பொருள் கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளது.

1. ஆயுஷ் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மருத்துவத்தில்  குணமடைதலுக்கு திருப்திகரமான ஆதாரம் உள்ளதா? அப்படி இருந்தால், அது பலவீனமாக உள்ளதா, அல்லது நடுத்தர நிலையில் உள்ளதா அல்லது வலுவாக உள்ளதா?2. கோவிட் -19-இன் தீவிரமான நிலை, ஹைபர் இம்யூன் நிலையில் உள்ளதா அல்லது நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பதால் உள்ளதா?


3. கோவிட் சிகிச்சைக்கு ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ள, அமைச்சகத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் தயாராக இருக்கிறார்களா?

4. பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் ரீதியில், சுகாதாரத்துறையைச் சேர்ந்த எத்தனை பேர் சிகிச்சை மேற்கொள்வதற்கு தயாராக இருக்கிறார்கள்?

மேலும் படிக்க:  லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்கள், அறிகுறி இல்லாதவர்கள் யோகா, ஆயுர்வேத நெறிமுறைகளை பின்பற்ற மத்திய அரசு பரிந்துரை..5. கொரோனா சிகிச்சை மற்றும் நோய் தடுப்பு ஆயுஷ் அமைச்சகத்துக்கே கொடுப்பதிலிருந்து சுகாதாரத்துறை அமைச்சரை எது தடுக்கிறது? என கேள்விகளை எழுப்பியுள்ளது இந்திய மருத்துவ சங்கம்..
First published: October 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading