சீனாவை விட இருமடங்கு இழப்பைச் சந்தித்துள்ள இத்தாலி: கைகொடுக்கும் சீனா, கியூபா, ரஷ்யா!

கொரோனா சிகிச்சை குறித்த நுட்பங்களை இத்தாலிய மருத்துவர்களுக்கு சீன மருத்துவர்கள் விளக்கி வருகின்றனர்,

சீனாவை விட இருமடங்கு இழப்பைச் சந்தித்துள்ள இத்தாலி: கைகொடுக்கும் சீனா, கியூபா, ரஷ்யா!
இத்தாலி
  • Share this:
கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு சீனா, கியூபா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் மருத்துவர்களை அனுப்பி உதவியுள்ளன.

கொரோனா பரவத் தொடங்கிய சீனாவைக் காட்டிலும் இருமடங்கு இழப்பைச் சந்தித்துள்ள இத்தாலிக்கு சீனா 22 மருத்துவ வல்லுனர்களையும் 30 டன் மருத்துவப் பொருட்களையும் அனுப்பி உதவியுள்ளது.

கொரோனா சிகிச்சை குறித்த நுட்பங்களை இத்தாலிய மருத்துவர்களுக்கு சீன மருத்துவர்கள் விளக்கி வரும் நிலையில், எபோலா தொற்றின்போது சிகிச்சை அளித்த 52 மருத்துவர்கள் கொண்ட குழுவை கியூபா, இத்தாலிக்கு அனுப்பியுள்ளது. 100 ராணுவ மருத்துவர்களை அனுப்பியுள்ள ரஷ்யா, கிருமி நாசினி தெளிக்கும் டிரக்குகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களையும் இத்தாலிக்கு அனுப்பியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Also see:
First published: March 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading