• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • 10 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டால் 2 அல்லது 4 பேருக்கே கொரோனா தொற்றுகிறது: மத்திய அரசு நிபுணர்கள் கருத்து

10 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டால் 2 அல்லது 4 பேருக்கே கொரோனா தொற்றுகிறது: மத்திய அரசு நிபுணர்கள் கருத்து

கோவிஷீல்டு தடுப்பூசி

கோவிஷீல்டு தடுப்பூசி

தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Share this:
    தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,32,348 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை ஒரே நாளில் 2263 என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தற்போது வரை கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளே மக்கள் பயன் பாட்டில் உள்ளன. இன்னும் பல கொரோனா தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனஅரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை நாட்டில் 13 கோடிக்கும் மேற்பட்டோருக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட் டுள்ளன.

    இதனிடையே, மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் மீதான சந்தேகங்களும், அச்சங்களும் இன்னும் விலகவில்லை. மேலும், தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கும் தொற்று ஏற்படுவதாக செய்திகள் பரவுவதால் மக்கள் இடையே தயக்கமும் நிலவி வருகிறது.

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் சுகாதாரத் துறை நிபுணர்கள் நேற்று கூறியதாவது:

    கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கு மிக அரிதாகவே வைரஸ் தொற்று ஏற்படுகிறது. உதாரணமாக, 10 ஆயிரம் பேர் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டால் அவர்களில் 2 அல்லது 4 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்படுவது தெரியவந்துள்ளது.

    கோவாக்சின் தடுப்பூசியை இதுவரை 1.10 கோடி பேர் போட்டுக் கொண்டுள்ளனர். இவர்களில் முதல் தவணையை செலுத்திக் கொண்ட 90.3 லட்சம் பேரில் 4,208 பேருக்கு (0.04%) மட்டுமேகரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

    இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 17 லட்சம் பேரில் 695 பேருக்கு மட்டுமே பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருகிறது. இது வும் 0.04 சதவீதம் தான்.

    இதேபோல, கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களிலிலும் மிக மிகக் குறைவான நபர்களுக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதுவும், இந்த நபர்களில் பெரும்பாலோனார் சுகாதார ஊழியர்கள் போன்ற முன்களப் பணியாளர்கள் ஆவர்.

    எனவே, கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள மக்கள் தயக்கம் காட்ட வேண்டாம். இப்போதைய சூழலில், இந்த பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதை மக்கள் உணர வேண்டும், என்று கூறியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: