மாநகராட்சியில் `பாஸிட்டிவ்`... தனியாரில் `நெகட்டிவ்`... - கொரோனா பரிசோதனை முடிவுகளில் நீடிக்கும் குழப்பங்கள்

கொரோனா பரிசோதனை முடிவுகளில் சென்னை மாநகராட்சி அளித்த தகவலுக்கும், ஒரு தனியார் ஆய்வகம் அளித்த தகவலுக்கும் குழப்பங்கள் நிகழ்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாநகராட்சியில் `பாஸிட்டிவ்`... தனியாரில் `நெகட்டிவ்`... - கொரோனா பரிசோதனை முடிவுகளில் நீடிக்கும் குழப்பங்கள்
கோப்புப்படம்
  • Share this:
சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர், மாநகராட்சி நடத்திய காய்ச்சல் முகாமில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி கொரோனா பரிசோதனைக்காக தன்னுடைய சளி மாதிரிகளை கொடுத்துள்ளார். அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் ஜூலை 25 அன்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தனக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாத நிலையில், மாநகராட்சி அறிவுறுத்தல் காரணமாகவே பரிசோதனை செய்து கொண்டதாக கூறும் அந்த இளைஞர், மாநகராட்சி முடிவுகளில் சந்தேகம் இருந்ததால் தனியார் ஆய்வகத்தில் மீண்டும் பரிசோதனை செய்தார்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆய்வகம் ஒன்றில், ஜூலை 25 மாலை தன்னுடைய சளி மாதிரிகளை அளித்துள்ளார். ஜூலை 26 இரவு அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன.


இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் குருநானக் கல்லூரியில் இயங்கி வரும் கொரோனா சிகிச்சை மையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து நம்மிடம் பேசிய அந்த இளைஞர்,முடிவுகளில் ஏற்பட்ட குழப்பங்கள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கியும், கட்டாயப்படுத்தி அவரை தங்க வைத்து உள்ளதாகவும், எப்படி குழப்பம் ஏற்பட்டது என்று தெரியவில்லை என்றும் பதில் அளித்துள்ளனர்.

Also read... டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் என்ன? சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்மேலும், வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வசதியுள்ளது அதற்காகவது அனுமதி அளியுங்கள் என்று கேட்டதற்கு, மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்து பார்த்து விட்டு அனுப்புகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அங்கீகரிக்கப்பட்ட இரு ஆய்வக முடிவுகளும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக இருப்பதால் தான் தேவையற்ற அலைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு உள்ளதாக அந்த நபர் வருத்தம் தெரிவிக்கிறார்.

இது குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் விளக்கம் கேட்டதற்கு, சம்பந்தபட்ட ஆய்வகங்களின் தரம் குறித்து ஆராயப்படும் என்றார்.

மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் கூறுகையில், ஐ.சி.எம்.ஆர்., ஆங்கீரித்த ஆய்வக முடிவுகளின் அடிப்படையிலேயே மாநகராட்சி தெரிவித்து உள்ளதாகவும், இது போன்ற நிகழ்வுகள் அரிதாக நிகழ்வதாகவும் தெரிவித்தவர், இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கமளித்தார்.

அண்மை காலமாக நீடித்து வரும் இதுபோன்ற குழப்பங்களை தவிர்க்க சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
First published: July 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading