5 மாவட்டங்களில் பரிசோதனைகள் அதிகரிப்பு; இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை -அமைச்சர் விளக்கம்

சிவப்பு மண்டலங்களாக உருவாக வாய்ப்புள்ள 5 மாவட்டங்களில் பரிசோதனைகளை அதிகரித்துள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அம்மாவட்டங்களில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

5 மாவட்டங்களில் பரிசோதனைகள் அதிகரிப்பு; இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை -அமைச்சர் விளக்கம்
சிவப்பு மண்டலங்களாக உருவாக வாய்ப்புள்ள 5 மாவட்டங்களில் பரிசோதனைகளை அதிகரித்துள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அம்மாவட்டங்களில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
  • News18 Tamil
  • Last Updated: September 10, 2020, 3:39 PM IST
  • Share this:
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபாதை மேம்பாலப் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும், மருத்துவமனையில் கூடுதலாக 400 படுக்கைகள் கொண்ட கோவிட் வார்டையும் அவர் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு போர்க்கால அடிப்படையில் தமிழகத்தில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு 55,453,50 ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகளைச் செய்துள்ளோம் என தெரிவித்தார். மேலும், சிவப்பு மண்டலங்களாக உருவாக வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட நாகை, கடலூர், கோவை, சேலம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தலைமைச் செயலாளரின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இன்னும் ஓரிரு நாட்களில் அந்த மாவட்டங்களில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் கூறினார். மேலும், கொரோனா சிகிச்சைக்கென சில நபர்களே தனியார் மருத்துவமனைகளை நாடிச் செல்கின்றனர் என்றாலும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள கோவிட் வார்டுகளில் படுக்கைகளை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இ-சஞ்சீவினி செயலி மூலம் இதுவரை 1 லட்சம் நபர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Also read: 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று உச்சம் தொடும் - தலைமை செயலாளர் சண்முகம்தொடர்ந்து பேசிய அவர், கோவிட்-ஷீல்ட் தடுப்பு மருந்து பரிசோதனை நிலையில்தான் உள்ளது எனவும் ஐ.சி.எம்.ஆர் அளித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி தொடர்ந்து மனிதப் பரிசோதனை நடத்தப்படும் எனவும் கூறினார்.

மேலும், கிருஷ்ணகிரி, கடலூர் மாவட்டங்களில் தொற்று விகிதமும், இறப்பு விகிதமும் அதிகம் காணப்படுவதால் அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேவையான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.அமைச்சரைத் தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுமக்கள் அனைவருக்கும் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவற்றில் பொதுமக்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் அரசிற்கு தொடர்ந்து தேவை என தெரிவித்தார். தமிழகத்தில் 1.68 விழுக்காடாகக் குறைந்துள்ள இறப்பு விகிதத்தை 1 சதவிதத்துக்குள் கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.
First published: September 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading