ஹோம் /நியூஸ் /கொரோனா /

வீதிக்கு வரும் கொரோனா பரிசோதனை - வீடு வீடாகச் சென்று மக்களை அழைத்த புதுவை முதல்வர்

வீதிக்கு வரும் கொரோனா பரிசோதனை - வீடு வீடாகச் சென்று மக்களை அழைத்த புதுவை முதல்வர்

கொரோனா பரிசோதனைக்காக அமைச்சருடன் சேர்ந்து வீடு வீடாகச் சென்று மக்களை அழைத்த புதுவை முதல்வர்

கொரோனா பரிசோதனைக்காக அமைச்சருடன் சேர்ந்து வீடு வீடாகச் சென்று மக்களை அழைத்த புதுவை முதல்வர்

கொரோனா பரிசோதனைக்காக சுகாதாரத்துறை அமைச்சருடன் வீடு வீடாகச் சென்று புதுவை முதல்வர் மக்களை அழைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

புதுச்சேரியில் கொரோனா தொற்று கடந்த ஜூலை முதல் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக பரிசோதனைகளை அதிகப்படுத்தி, அதன் மூலம் நோயாளிகளைக் கண்டறிந்து வருகின்றனர். இதற்காக நடமாடும் கொரோனா பரிசோதனை நிலையம், துணை சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் 2,000ல் இருந்த பரிசோதனை, தற்போது 5,000 தாண்டியுள்ளது. மேலும், தற்போது வீதி தோறும் கொரோனா பரிசோதனை நடத்த அரசு முன்வந்துள்ளது. இதற்காக ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

நகரப் பகுதியில் வீதிகளில் உமிழ்நீர் சேகரிக்க சுகாதாரத்துறை பணியாளர்கள் வருகின்றனர். அப்போது ஆஷா பணியாளர்கள் வீடு, வீடாக வந்து பரிசோதனைக்கு வரும்படி மக்களுக்கு அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் முதல்வரின் தொகுதியான நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட மேட்டுத்தெருவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவர் மரணமடைந்தார். இதனால் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த அரசு முடிவு செய்தது. சுகாதாரத்துறை மூலம் மேட்டுத்தெருவில் இன்று கொரோனா பரிசோதனை முகாம் நடத்தினர்.

Also read: மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு

இந்த முகாமில் பங்கேற்று பரிசோதனை செய்துகொள்ளும்படி வீடு வீடாகச் சென்று தொகுதி எம்எல்ஏவான முதலமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், எம்எல்ஏ ஜான்குமார் ஆகியோர் அழைப்பு விடுத்தனர். பெரும்பாலான மக்கள் பரிசோதனையில் பங்கேற்று மாதிரியை அளித்தனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் கூறும்போது, கொரோனா பரிசோதனை வீதிக்கு வரும்போது அப்பகுதி மக்கள் தவிர்க்க வேண்டாம். தொற்றைத் தடுக்க வேண்டும் என்பதற்காக அரசு வீடு தேடி வந்துள்ளது. தொற்றைத் தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள் எனத் தெரிவித்தார்.

Published by:Rizwan
First published:

Tags: CoronaVirus, Narayana samy