குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல்

குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தை

தமிழகத்தில் குழந்தைகள் மத்தியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது, பெற்றோர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், தமிழத்தில் தொற்று பரவல் நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. பெரியவர்களை தொடர்ந்து, குழந்தைகள் மத்தியிலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால், குழந்தைகள் மத்தியில் தொற்று பரவல் குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. குறிப்பாக கடந்த 10 நாட்களில் மட்டும், பச்சிளம் குழந்தைகள் முதல் 12 வயதுக்கு உட்பட்ட 2000 குழந்தைகளுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில், 319 குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

  இது பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், குடும்ப உறுப்பினர்களிடமிருந்தே குழந்தைகளுக்கு தொற்று அதிகளவில் பரவுவதாக கூறப்படுகிறது. எனவே பெரியோர்கள் கொரோனா முன்னெச்சரிக்கைகளை முறையாக பின்பற்ற வலியுறுத்தப்படுகின்றனர்.

  படிக்க... தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க அனைத்து திறனையும் முழுமையாக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி

  குழந்தைகள் வெளியே செல்வதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும் என்றும், அப்படியும் சென்றால் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் மாஸ்க் அணியவும் அறிவுறுத்தப்படுகின்றனர். காய்ச்சல், சளி, இருமல், அடிவயிற்றில் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால், குழந்தைகளுக்கு உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், சில குழந்தைகளுக்கு தசை வலி போன்ற அறிகுறிகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: