Antibody cocktail | கொரோனா சிகிச்சைக்கான ஆன்ட்டிபாடி கலவை இந்தியாவில் அறிமுகம்: ஒரு டோஸ் விலை ரூ.59,750

கொரோனா வைரஸ்

ராச் (Roche) என்ற நிறுவனம் தயாரித்த ஆன்ட்டிபாடி கலவை மருந்து ஒரு டோஸ் விலை ரூ.59,750. இதன் முதல் பேட்ச் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 2வது பேட்ச் வரும் ஜூன் மாதம் மத்தியில் இந்தியாவுக்கு வரும்.

  • Share this:
    ராச் (Roche) என்ற நிறுவனம் தயாரித்த ஆன்ட்டிபாடி கலவை மருந்து ஒரு டோஸ் விலை ரூ.59,750. இதன் முதல் பேட்ச் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 2வது பேட்ச் வரும் ஜூன் மாதம் மத்தியில் இந்தியாவுக்கு வரும்.

    இந்த மருந்தை விற்க சிப்ளா மருந்து உற்பத்தி நிறுவனம் உரிமை பெற்றுள்ளது.

    antibody cocktail என்றால் என்ன?

    ஆன்ட்டிபாடி என்பது நோய் எதிர்ப்பு செல்களின் மூலம் தயாராகும் ஒரு புரோட்டீன், அதாவது இது சரியான வடிவத்தில் வெளியிலிருந்து உடலுக்குள் ஊடுருவும் ஒரு குறிப்பிட்ட தொற்றின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னை ஒட்டிக் கொள்ளும். அதாவது ஊடுருவும் புறக்கிருமி வைரசாக இருந்தாலும் பாக்டீரியாவாக இருந்தாலும். இப்ப்டி ஒட்டிக் கொள்வதன் மூலம் அது கிருமித் தொற்றாக மாறுவதை தடுப்பதே ஆன்ட்டிபாடி. அல்லது என்ன செய்யும் என்றால் நோய் எதிர்ப்பு செல்கள் இவற்றை அழிக்குமாறு செய்யும்.

    இதில் antibody cocktail என்பது சக்தி வாய்ந்த ஒன்றுக்கு ஒன்று ஈடுகொடுக்கும் வைரஸ் வீரியமழிப்பு இரண்டு ஆன்ட்டிபாடிகளின் கலவையாகும். கொரோனா வைரஸில் காணப்படும் ஸ்பைக் என்பதுதான் பிற செல்களைத் தாக்க உதவுகிறது. இதனைத் தடுத்து விட்டால் கொரோனா வீரியமிழக்கும்.

    இப்போது ராச் நிறுவனம் தாரித்துள்ள ஆன்ட்டிபாடி காக்டெய்ல் கலவை (Casirivimab and Imdevimab) இந்தியாவில் தற்போது அறிமுகமாகியுள்ளது. மொத்தம் ஒரு லட்சம் பேக்குகள் வந்துள்ளன, இதன் மூலம் 2 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கலாம். இந்த மருந்துகளை இந்தியாவில் சிப்ளா மருந்து உற்பத்தி நிறுவனம் விற்கும்.

    Casirivimab 600 மிலி கிராம், Imdevimab 600 மிலி கிராம் அடங்கிய 1200 மிலி கிராம் கொண்ட ஒரு டோஸின் விலை அனைத்து வரிகள் உட்பட ரூ.59,750. 2 நோயாளிகளுக்கான இரட்டை டோஸ் பேக் விலை ரூ.1,19,500.

    இந்த ஆன்ட்டிபாடி மருந்து முன்னணி மருத்துவமனைகளிலும் கோவிட் சிகிச்சை மையங்களிலும் கிடைக்கும். மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு மையம் இதனை அவசரமாக பயன்படுத்த வேண்டியவர்களுக்கு கொடுக்க அனுமதி வழங்கியுள்ளது.

    இந்த ஆண்ட்டிபாடி சிகிச்சை மருந்தை கொரோனா லேசாக மற்றும் மிதமாக பாதித்த, குறைந்தது 40 கிலோ எடையுள்ள 12 வயது முதலான சிறுவர்கள் முதல் இளையோருக்கு வழங்கலாம். அதாவது இவர்களுக்கு சீரியஸாகப் போகும் என்ற நிலை தெரிந்தால் இந்த காக்டெயில் ஆன்ட்டிபாடியை பயன்படுத்தலாம்.

    அதாவது நிலைமை மோசமடைவதற்கு முன்பாக அதிக ரிஸ்க் உள்ள கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு இது உதவும் என்கிறார் சிப்ளா நிறுவன நிர்வாக இயக்குநர் உமங் வோரா. மேலும் அவர் கூறும்போது இந்த ஆன்ட்டிபாடி சிகிச்சை மூலம் கொரோனா நோய் அறிகுறிகளை 4 நாட்கள் குறைக்கிறது என்றார் உமங் வோரா.
    Published by:Muthukumar
    First published: