மேலும், கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை மாற்றி அமைக்குமாறு தடுப்பூசி குறித்த தேசிய தொழில்நுணுக்க ஆலோசனைக் குழுவும், கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழுவும் பரிந்துரைத்தபடி இந்த மாற்றங்கள் வரவிருக்கிறது.
ஆனால் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியில் எந்த வித மாற்றமும் பரிந்துரைக்கப்படவில்லை.
கொரோனாவிலிருந்து சிகிச்சை பெற்று மீண்டவர்கள் 6 மாதங்களுக்கு வாக்சின் போட்டுக் கொள்ளக்கூடாது என்கிறது நிபுணர் குழு.
முதல் டோஸ் கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்ட பிறகு கொரோன பாசிட்டிவ் ஆகி சிகிச்சை பெற்று மீண்டவர்கள் 4 முதல் 8 வாரங்கள் காத்திருக்க நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
அதே போல் ரத்தத்தின் வெள்ளை அணுக்களில் தனித்துவமான வெள்ளை அணுவை குளோனிங் செய்து உருவாக்கப்படும் மோனோ குளோனல் ஆன்ட்டிபாடி செலுத்தப்பட்டவர்கள் மற்றும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டவர்கள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி 3 மாதங்களுக்குப்பிறகு வாக்சின் போட்டுக் கொள்ள வேண்டும் என்கிறது இந்த நிபுணர் குழு.
பிற தீவிர நோய் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலையில் இருந்தாலோ, ஐசியு சிகிச்சை தேவைப்பட்டாலோ அவர்கள் அடுத்த வாக்சின் டோஸுக்காக 4 முதல் 8 வாரங்கள் காத்திருக்க வேண்டும்.
கருத்தரித்த பெண்கள், பால் கொடுக்கும் பெண்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது.
இந்த நிபுணர் குழுவின் பரிந்துரைகள் கோவிட்-19 க்கான தடுப்பூசி தேசிய நிபுணர் குழுவுக்கு அனுப்பப்படும். வாக்சின் அல்லது தடுப்பூசிக்கு முன்னால் அதிவிரைவு ஆண்டிஜென் டெஸ்ட் எடுக்கும் ஆலோசனையை இந்த நிபுணர் குழு நிராகரித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Vaccine, Covid-19 vaccine