இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மெல்ல மெல்ல ஓய்ந்து வரும் நிலையில், கொரோனாவின் உருமாறிய பல வேரியன்ட்கள் உலக நாடுகளை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. இதனிடையே சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு பெரிய ஆய்வின்படி ஆல்ஃபா வேரியன்ட்டோடு ஒப்பிடும் போது, கோவிட் -19 டெல்டா வேரியன்ட்டால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான அபாயத்தை இரட்டிப்பாக்கி (இருமடங்கு) இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலானவர்கள் கிட்டத்தட்ட டெல்டா வேரியன்ட்டால் தான் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே இங்கிலாந்தில் நடத்தப்பட்டுள்ள இந்த புதிய ஆராய்ச்சி மூலம் டெல்டா வேரியன்ட், கொரோனா வைரஸின் முந்தைய வேரியன்ட்களை விட அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்பதற்கான கூடுதல் ஆதாரங்கள் இதன் மூலம் கிடைத்துள்ளன.
தி லான்செட் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு பொது சுகாதார இங்கிலாந்து (PHE) மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு முடிவு மக்கள் முழுமையாக தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. ஆய்வு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், ஆல்ஃபா வேரியனட்டுடன் ஒப்பிடும்போது டெல்டா வேரியனட்டால் பாதிக்கப்பட்ட கோவிட் -19 நோயாளிகளுக்கு மேல்சிகிச்சைக்காக உயர் மருத்துவமனையில் அனுமதி அல்லது அவசர சிகிச்சை வருகை ஆபத்து (emergency care attendance risk) இருப்பது கண்டறியப்பட்டது என்று கூறினர்.
மேலும் இந்த ஆய்வு முடிவுகள் தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் இடையே ஆல்ஃபா வேரியன்ட்டை விட, டெல்டா வேரியன்ட் நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு சேவைகளில் அதிக சுமையை ஏற்படுத்தக்கூடும் என்று கூறுகின்றன. இந்த ஆய்வு கடந்த மார்ச் முதல் மே வரையிலான காலகட்டத்தில் இங்கிலாந்தில் புழங்க துவங்கிய ஆல்ஃபா மற்றும் டெல்டா ஆகிய 2 வேரியன்ட்களால் பாதிக்கப்பட்ட சுமார் 43,338 மக்களின் தரவுகளை எடுத்து கொண்டது.
Also Read : அதிகரிக்கும் கொரோனா... கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் ஆய்விற்காக எடுத்து கொள்ளப்பட சுமார் 43,338 பேரின் தரவுகளின் படி, இவர்களில் பெரும்பான்மையானோர் தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் என்பது தான். இந்த ஆய்வு குறித்து பேசிய இங்கிலாந்தை சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் கேவின் டப்ரேரா, "இந்த ஆய்வு ஆல்ஃபாவை விட டெல்டாவால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற முந்தைய கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்துகிறது.
அதே சமயம் தடுப்பூசி டெல்டாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. ஆனால் ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் தடுப்பூசி போடவில்லை. இங்கிலாந்தில் காணப்படும் சுமார் 98% பாதிப்புகள் டெல்டா வேரியன்டால் ஏற்பட்டு வருவதால், 2 டோஸ் தடுப்பூசிகள் போட்டு கொள்ளாதவர்கள் விரைவில் போட்டு கொள்ள வேண்டும். இதை செய்வது இனி வரும் நாட்களில் மிகவும் முக்கியம்" என்றார்.
டெல்டா வேரியன்ட் வீரியமிக்க தொற்றுநோய் மட்டுமல்ல, மோசமான விளைவுகளுக்கும் வழிவகுக்கும் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. டெல்டா வேரியன்ட்அதிக வைரஸ் துகள்களை உருவாக்குகிறது, இது கொரோனா வைரஸின் கடந்த வெர்ஷன்களை விட அதிக தொற்றை ஏற்படுத்துகிறது. இது மிக விரைவாக வேலை செய்கிறது, அதாவது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு பதிலளிக்கும் வாய்ப்பை பெறுவதற்கு முன்பே டெல்டா வேரியன்ட் உடலில் தீவிரமாக காலூன்றி விடுகிறது என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, CoronaVirus