குஜராத்: கொரோனா நோயாளிகளும் மருத்துவர்களும் சேர்ந்து ஆட்டம், பாட்டத்துடன் தீபாவளி கொண்டாட்டம்

வதோத்ராவிலுள்ள மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளும் மருத்துவர்களும் சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

குஜராத்: கொரோனா நோயாளிகளும் மருத்துவர்களும் சேர்ந்து ஆட்டம், பாட்டத்துடன் தீபாவளி கொண்டாட்டம்
கொரோனா நோயாளிகளும் மருத்துவர்களும் சேர்ந்து ஆட்டம், பாட்டத்துடன் தீபாவளி கொண்டாட்டம்
  • Share this:
குஜராத் மாநிலம் வதோத்ராவில் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளும் மருத்துவர்களும் சேர்ந்து ஆட்டம், பாட்டத்துடன் தீபாவளியைக் கொண்டாடிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் கொரோனா தொற்று, மறுபக்கம் பண்டிகைகள் என பண்டிகை தினம் நகர்ந்து சென்றது.

கொரோனா நோய்த் தொற்று உள்ள பலர், வீடுகளில் தங்களது குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாட முடியாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் தனிமையைப் போக்கும் விதமாக கொரோனா நோயாளிகளுடன் சேர்ந்து மருத்துவர்கள் ஆட்டம், பாட்டத்துடன் தீபாவளியைக் கொண்டாடினர்.

வதோத்ராவில் மருத்துவமனை ஒன்றில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் கையில் அகல்விளக்குகளை ஏந்தி தீபத் திருநாளைக் கொண்டாடினர். இசைக்கு ஏற்றவாறு கைகளை அசைத்தும், நடனம் ஆடியும் அசத்தினர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஒரு மருத்துவர், சமூக இடைவெளியைப் பேணி இந்தக் கொண்டாட்டம் நடைபெற்றதாகவும் பண்டிகை தினத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் தாங்கள் இல்லையென்ற உணர்வு நோயாளிகளுக்கு வந்துவிடக் கூடாது இதன் முக்கிய நோக்கமென்றும் கூறினார்.
First published: November 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading