Home /News /coronavirus-latest-news /

வெளிநாடுகள் இந்தியாவுக்கு உதவுகின்றன, நன்றி, ஆனால் இதற்காக மோடியைப் புகழ்வதா?, இது அவரது திறமையின்மையின் விளைவுதானே- சோனியா காந்தி சாடல்

வெளிநாடுகள் இந்தியாவுக்கு உதவுகின்றன, நன்றி, ஆனால் இதற்காக மோடியைப் புகழ்வதா?, இது அவரது திறமையின்மையின் விளைவுதானே- சோனியா காந்தி சாடல்

சோனியா காந்தி

சோனியா காந்தி

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை உலுக்கி வருகிறது, மக்கள் பீதியிலும் சோகத்திலும் துயரத்திலும் உழன்று வருகின்றனர் இந்தத் தருணத்தில் ஒரு அம்சத் திட்டமாக ‘உயிர்களைக் காப்பாற்றுவோம்’ என்பதாக மட்டுமே அரசு, அரசுசாராத சமூக ஊழியர்கள், அரசியல்வாதிகள்  அனைவரது கவனமும் இருக்க முடியும் என்கிறார் சோனியா காந்தி.

மேலும் படிக்கவும் ...
  முன்னணி ஆங்கில நாளிதழுக்கு சோனியா காந்தி அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:

  நான் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கஷ்டப்படும் கோடிக்கணக்கான மக்களுக்காக அனைத்து உதவிகளையும் பெற்றுத் தர வேண்டும். கொரோனா தடுப்பூசி மிகப்பரவலாக அனைவருக்கும் போடப்படுமாறு வேகமாக அதன் பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி சப்ளையை அதிகரித்தல் என்பதுதான் இப்போதைய தேசிய முயற்சியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

  நாங்கள் குறைகூறும், குற்றம் கூறும் அரசியலை விடுத்து உதவிகள், நிவாரணங்கள் பற்றியே சிந்தித்து வருகிறோம். எங்களால் முடிந்த உதவியைச் செய்து வருகிறோம். தேசிய நெருக்கடி ஏற்பட்டுள்ள தருணத்தில் பலரது கருத்துகளையும் அறிவுரைகளையும் கேட்க வேண்டும், ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்ற அணுகுமுறை பயனளிக்காது.

  பிரதமர் மோடி ஈவு இரக்கமின்றி வாக்சின் கொள்கையை அரசியலாக்கி வருகிறார். உண்மையான நிலவரத்தை மறைப்பதில் ம.பி., உ.பி., குஜராத் அரசுகள் முன்னிலை வகிக்கின்றன.
  மத்திய அரசு கொரோனாவை வென்று விட்டோம், வீழ்த்தி விட்டோம் என்று பிரதமர் மோடியை புகழ்வதற்காக முன் கூட்டியே கொண்டாட்டம் போட்டனர். நம் முகத்தில் அறையும் உண்மைகள் புறக்கணிக்கப்பட்டன. நாடாளுமன்ற நிலைக்குழு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்தது ஆனால் அது புறக்கணிக்கப்பட்டது.

  இந்த ஆண்டு பிப்ரவரி தொடக்கத்தில் வெளிநாட்டு உள்நாட்டு மருத்துவ நிபுணர்கள் கொரோனா இரண்டாம் அலை குறித்து எச்சரித்தனர். ஆனால் தற்புகழ்ச்சியும் அலட்சியமும் மேலோங்கி இருந்தது.

  கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவும் நிகழ்வுகள் அனுமதிக்கப்பட்டன, அதன் அபாயம் புரியாமல் கொண்டாடப்பட்டன.

  கடந்த சில தினங்களாக சர்வதேச நாடுகள் நமக்கு உதவ முன்வந்துள்ளன, இதற்கு நன்றி, ஆனால் இதையும் ஏதோ மோடியைப் புகழ்வதற்கான சந்தர்ப்பமாக மாற்றி விட்டனர். ஆனால் உண்மையில் ஏன் இந்த நிலைமை அது நடப்பு ஆட்சியின் திறமையின்மையின் பிரதிபலிப்புதானே. அரசுக்கு மக்கள் பற்றி உணர்வும் இல்லை, எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதும் தெரியவில்லை. உதாரணத்துக்கு பாராளுமன்ற கட்டிட செண்ட்ரல் விஸ்டா திட்டம் இப்போது தேவைதானா? இதை கூறும் அதே வேளையில் நம் நாட்டிலும் பலரும், பல தனி நபர்களும் நிறுவனங்களும் நிவாரண உதவிகளை வழங்கி வருவது கரகோஷத்துக்குரியது.

  சுகாதாரப் பணியாளர்கள் செய்து வரும் தியாகமும், எடுக்கும் ரிஸ்குகளும் பாராட்டுதலுக்குரியது, அவர்களுக்கான நம் நன்றிக்கடன் ஈடுகட்ட முடியாதது, என்றார் சோனியா காந்தி.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Corona Vaccine, Corona Warriors, CoronaVirus, Modi, Sonia Gandhi

  அடுத்த செய்தி