Corona Relief Delhi | அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு- வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு ரேஷன் இலவசம்; ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.5,000

Corona Relief Delhi | அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு- வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு ரேஷன் இலவசம்; ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.5,000

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த அங்கு தற்போது லாக்டவுன் போடப்பட்டுள்ளது, இதனையடுத்து வாழ்வாதாரத்தை இழந்த ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினருக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிதி உட்பட பல நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.

  • Share this:
    அடுத்த 2 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். வாடகை கார், ஆட்டோ ஓட்டுநர்கள் தலா ஒருவருக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அறிவித்தார்.

    டெல்லியில் கடந்த 3 வாரங்களுக்கு முன் கொரோனா வைரஸால் நாள்தோறும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதனால் டெல்லியின் மருத்துவ அமைப்பு முறையே சீர்குலைந்துவிடும் நிலைக்குச் செல்வதாக முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்திருந்தார். ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியவில்லை ராணுவத்தை அனுப்புங்கள் என்று மணீஷ் சிசோடியாவும் கூறியிருந்தார்.

    இதையடுத்து, கடந்த 3 வாரங்களாக கடும் விதிககளுடன், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த 3 வார ஊரடங்கால் கொரோனா பாதிப்பு 30 சதவீதம் குறைந்து, தினசரி பாதிப்பு 18 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

    இந்நிலையில் நிவாரணங்களை அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:

    ''டெல்லியில் லாக்டவுன் கொண்டுவந்தபின், கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால், இந்த லாக்டவுனால் பலருக்கும் பணச்சிக்கல், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பதிவுசெய்த கட்டிடப் பணியாளர்களுக்கு கடந்த மாதம் ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கினோம்.

    இந்நிலையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் அடுத்த 2 மாதங்களுக்கு இலவசமாகப் பொருட்கள் வழங்கப்படும். ஆட்டோ, வாடகை கார் ஓட்டுநர்களும் தினசரி வருமானம் ஈட்டுபவர்கள், அவர்களும் லாக்டவுன் காலத்தில் சிரமப்படுவார்கள் என்பதால், பதிவு செய்த ஓட்டுநர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இந்தச் சலுகை தொடர்ந்து வழங்கப்படாது. கரோனா பாதிப்பு குறைந்தவுடன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, ஊரடங்கு நீக்கப்படும்.

    இந்த உதவி மக்களுக்குப் போதுமானதாக இருக்காது என்பது தெரியும். இருப்பினும், இந்த நேரத்தில் அரசின் சிறிய உதவியாக அவர்களுக்கு இருக்கும். கடந்த ஆண்டு லாக்டவுன் காலத்தில் 1.56 லட்சம் ஓட்டுநர்கள் நிதியுதவி பெற்றார்கள். நாம் கடினமான காலத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம். மிகவும் ஆபத்தான 2-வது அலையைக் கடக்க வேண்டும்''.

    இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.
    Published by:Muthukumar
    First published: