கொரோனா வார்டுகளாக மாறிய கோயில் மண்டபங்கள்!

மாதிரி புகைப்படம்

ஆந்திராவில் கொரோனா தொற்றுக்கு  சிகிச்சையளிக்க வசதியாக கோயில் மண்டபங்கள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன

 • Share this:
  ஆந்திராவில் கொரோனா தொற்றுக்கு  சிகிச்சையளிக்க வசதியாக கோயில் மண்டபங்கள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.

  ஆந்திராவில் கொரோனா 2வது அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது.  நேற்று வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில்  இதுவரை இல்லாத அளவாக  24,171 பேர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து ஆந்திராவில் பதிவான  அதிகபட்ச தினசரி எண்ணிக்கை இதுவாகும். மேலும், 101 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இறப்பு  எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.

  கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  எனவே, கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க வசதியாக ஆந்திராவில் உள்ள கோவில் மண்டபங்களில் கொரோனா வார்டு அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

  திருமலா திருப்பதி கோவில்,  விஜயவாடாவில் உள்ள துர்கா தேவி கோவில்,  மேற்கு கோதாவரியில் உள்ள துவாரகா திருமலா கோவில் உள்ளிட்ட16 கோவில்களின் மண்டபங்களில் 1000 படுக்கை வசதிகளுடன்  கொரோனா சிகிச்சை வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

  கோவில் கட்டிடங்களில் கிடைக்கும் இடத்தின் அடிப்படையில், கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, மேலும், நோயாளிகளின் செயல்பாடுகள் குறித்து  மருத்துவர்கள்  24 மணி நேரமும் கண்காணிப்பார்கள். வென்டிலேட்டர் ஆதரவு தேவையில்லாத சிறிய மற்றும் மிதமான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க  இந்த மையங்கள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: