CoronaVirus : கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளுக்கு மிகவும் சவாலாக இருக்குமா..?

பெரும்பாலான குழந்தைகள் அதிக காய்ச்சல், குளிர், மூச்சு திணறல், இருமல், வாசனை இழப்பு, தொண்டை வலி, சோர்வு, தசை வலி, மற்றும் சளி போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது.

பெரும்பாலான குழந்தைகள் அதிக காய்ச்சல், குளிர், மூச்சு திணறல், இருமல், வாசனை இழப்பு, தொண்டை வலி, சோர்வு, தசை வலி, மற்றும் சளி போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது.

  • Share this:
தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சுமார் 30000க்கும் மேற்பட்டோர் தினமும் பாதித்து வருகின்றனர். COVID-19 இரண்டாவது அலையில் எண்ணற்ற குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முறை வித்தியாசமான அறிகுறிகள் காணப்பட்டது.

தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தினமும் தமிழகத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இரண்டாவது அலையின் தாக்கமே நிறைவடையாத நிலையில் மூன்றாவது அலை குறித்த தகவல்களும் பரவி வருகிறது. இது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று வீதம் மற்றும் தடுப்பூசி கிடைக்காதது ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, ​​வரவிருக்கும் மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. இது பெற்றோர்களிடையே பெரும் பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனினும், கொரோனா வைரஸ் குறித்து பெற்றோர்கள் பயப்படக்கூடாது, ஏனெனில் இது குழந்தைகளுக்கு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று குழந்தைகள் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெளிவுப்படுத்திய எய்ட்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, கோவிட் -19 மூன்றாவது அலைகளின் போது குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என கூறியுள்ளார். இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (ஐஏபி) கூறுகையில், குழந்தைகள் தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பது உண்மைதான், ஆனால் கோவிட் -19ன் மூன்றாவது அலை பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்க வாய்ப்பில்லை என விளக்கியுள்ளது.



அறிக்கைகள் அடிப்படையில் பார்த்தால், கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளில் கிட்டத்தட்ட 90 சதவீத குழந்தைகளுக்கான பாதிப்பில், லேசான அறிகுறிகள் அல்லது அறிகுறியற்ற பாதிப்புகள் உள்ளது. உண்மையில், குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயத்தில் உள்ளது, ஆனால் கடுமையான தொற்றுநோய்க்கான ஆபத்து சாத்தியமில்லை. எனினும் குழந்தைகள் தொற்றுநோயிலிருந்து விடுபடுகிறார்கள் என்பது அர்த்தம் அல்ல, ஆனால் பாதிப்பு மிகக் குறைவு என்றே மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மொத்த COVID-19 பாதிப்பு எண்ணிக்கைகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையானது 3 முதல் 4 சதவீதம் மட்டுமே இரண்டாவது அலையின் போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இப்போதுதான் குழந்தை பிறந்துள்ளதா..? தாய் , சேய் இருவரையும் கொரோனாவிலிருந்து பாதுகாக்க இவற்றை பின்பற்றுங்கள்..!

குழந்தைகளில் COVID-19ன் அறிகுறிகள் :

பெரும்பாலான குழந்தைகள் அதிக காய்ச்சல், குளிர், மூச்சு திணறல், இருமல், வாசனை இழப்பு, தொண்டை வலி, சோர்வு, தசை வலி, மற்றும் சளி போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது. சில குழந்தைகளுக்கு எந்த அறிகுறிகளையும் காண்பிப்பதில்லை.



நீங்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் :

* COVID-19ன் அறிகுறிகள் தோன்றியவுடன், உங்கள் குழந்தையை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தவும். வைரஸ் இருப்பதை சோதித்து ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்கவும்.

* உங்கள் குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்தால், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் மற்றும் செல்லப்பிராணிகளிடமிருந்து அவர்களை தனியாக வைக்கவும்.

கைக்குழந்தையாக இருந்தால், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் எல்லா நேரத்திலும் முககவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இப்படி பண்ணா கொரோனா பரவும் ஆபத்து குறைவா? அப்போ டிரை பண்ணலாமே!

* முடிந்தால் உங்கள் குழந்தைக்கு ஒரு தனி குளியலறையைப் பயன்படுத்தவும் அல்லது ஒவ்வொரு முறை குளித்த பின்னரும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும்.

* பாத்திரங்கள், உணவு, படுக்கை, துண்டுகள் மற்றும் பிறவற்றை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.



* ஆரோக்கியமான சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்ற குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அறிவுரை கூறுங்கள்.

கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று நாட்டின் சிறந்த குழந்தைகள் நிபுணர்கள் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் உங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது முக்கியம் என்றும் அவர்கள் தெளிவுப்படுத்தியுள்ளார். 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் இதுவரை தடுப்பூசி செலுத்தவில்லை என்பதால் தான் மிகவும் கவனமாக இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

 
Published by:Sivaranjani E
First published: