எத்தனை கொரோனா தடுப்பூசிகள் இருக்கிறது தெரியுமா? ஒரு பார்வை!

அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை மக்கள் தாமதிக்காமல் செலுத்திக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே 3வது அலையில் இருந்து தப்பிக்க முடியும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை மக்கள் தாமதிக்காமல் செலுத்திக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே 3வது அலையில் இருந்து தப்பிக்க முடியும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

  • Share this:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 2வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மே 28, 2021 நிலவரப்படி இந்தியாவில் 120,656,061 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 4,41,23,192 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர். முதன்முதலாக கோவிட்ஷீல்டு மற்றும் கோவாக்சின் என இரண்டு தடுப்பூசிகளுக்கு மட்டுமே அவசரகால பயன்பாட்டு அனுமதியை மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியிருந்தது.

கோவாக்சினைப் பொறுத்தவரை பாரத் பயோடெக், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக்கம் மற்றும் என்.ஐ.வி இணைந்து கண்டுபிடித்தன. கொரோனா வைரஸின் செயல்படாத செல்களை உடலுக்குள் செலுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலம் அந்த செல்களை அடையாளம் கண்டு கொரோனா வைரஸூக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்கிறது.

ALSO READ | உணவு கொடுக்க சென்ற போது பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்த கடைக்காரரின் மகன்!

ஆரம்ப கால தொற்று மற்றும் மிதமான கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பவர்களை கோவாக்சின் 78 விழுக்காடு பாதுகாப்பதாக தெரிவிக்கும் நிபுணர்கள், கடுமையான பாதிப்பில் இருந்து 100 விழுக்காடு பாதுகாப்பதாகவும் ஆய்வின் மூலம் உறுதிசெய்துள்ளனர். 4 முதல் 6 வார இடைவெளியில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ரா ஜென்கா கூட்டணியில் உருவாகியிருக்கும் கோவிட்ஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில் சீரம் தடுப்பூசி தயாரிப்பு மையம் தயாரிக்கிறது. ஆரம்ப கால தொற்று மற்றும் மிதமான தொற்றுகளில் இருந்து 76 விழுக்காடு பாதுகாக்கும் கோவிட்ஷீல்டு, கடுமையான தொற்றுகளில் இருந்து 100 விழுக்காடு பாதுகாக்கிறது. குறிப்பாக 65 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு மிக நல்ல பாதுகாப்பை வழங்குவதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். 12 முதல் 16 வார இடைவெளியில் கோவிட்ஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ்களை எடுத்துக்கொள்ளலாம் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.

ALSO READ | கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு - விவசாய நிலம் பாதிப்பு - இழப்பீடு அளிக்க #ONGC க்கு ஆட்சியர் உத்தரவு

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கோவிட் ஷீல்டு தடுப்பூசியைப்போலவே ஆரம்பக்கால தொற்றுக்கு மிதமான பாதுகாப்பை வழங்கும் ஸ்புட்னிக் வி, கடுமையான தொற்றுகளில் இருந்து 91.6 விழுக்காடு பாதுகாப்பை வழங்குகிறது. 21 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பைசர் (Pfizer), மாட்ரெனா (Moderna), ஜான்சன் & ஜான்சன், சினோபார்ம் (Sinopharm), கொரோனா வேக் (CoronaVac), நோவாவாக் (Novavac) உள்ளிட்ட தடுப்பூசிகளும் உலகளவில் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பைசர் மற்றும் மாட்ரெனா தடுப்பூசிகள் mRNA வகையைச் சேர்ந்தவை. தற்போது நடைமுறையில் இருக்கும் தடுப்பூசிகள் அனைத்தும் சராசரியாக 70 முதல் 90 விழுக்காடு மட்டுமே பலனைக் கொடுப்பவையாக இருக்கின்றன.

ALSO READ | எஸ்.பி.ஐ ஏடிஎம் பயன்பாட்டாளர்கள் கவனத்துக்கு...

இதனை மேம்படுத்துவதற்குரிய ஆய்வுகளை மருத்துவ நிறுவனங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. அதேநேரத்தில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை மக்கள் தாமதிக்காமல் செலுத்திக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே 3வது அலையில் இருந்து தப்பிக்க முடியும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 
Published by:Sankaravadivoo G
First published: