கொரோனா தடுப்பு மருந்துகள் எவ்வளவு நாள் பாதுகாப்பு வழங்கும் ? எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா விளக்கம்

கொரோனா தடுப்பு மருந்துகள் எவ்வளவு நாள் பாதுகாப்பு வழங்கும் ? எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா விளக்கம்

எய்ம்ஸ் இயக்குனர்

கொரோனா தடுப்பு மருந்து 10 மாதங்கள் வரை பாதுகாப்பு வழங்கும் என எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கொரோனா தடுப்பு மருந்துகள் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா, பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகளின் நோய் எதிர்ப்பு சக்தியிலும், எந்த மாறுபாடும் இல்லை என குறிப்பிட்டார். வாய்ப்பு கிடைக்கும்போது பொதுமக்கள், தடுப்பு மருந்தை செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். கொரோனா என்ன செய்துவிடப்போகிறது என்ற மக்களின் மெத்தனப்போக்கே தொற்று அதிகரிக்க காரணம் எனவும், அவசியமற்ற பயணங்களை இன்னும் சிறிது காலம் தவிர்க்க வேண்டும் என்றும், ரந்தீப் குலேரியா அறிவுறுத்தினார்.

  மேலும் கொரோனா தடுப்பு மருந்து 10 மாதங்கள் வரை பாதுகாப்பு வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தியாவில் கடந்த 94 நாட்களில் இல்லாத அளவிற்கு, நேற்று ஒரே நாளில் 40,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க... ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு.. லேசான சுனாமி எழும்பியதாக தகவல்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: