• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • Corona Virus| ஒரே நாளில் 39.329 பேருக்குக் கொரோனா, 214 பேர் மரணம்- பிரிட்டனை மிரட்டும் கொரோனா

Corona Virus| ஒரே நாளில் 39.329 பேருக்குக் கொரோனா, 214 பேர் மரணம்- பிரிட்டனை மிரட்டும் கொரோனா

பிரிட்டனில் அதிகரிக்கும் கொரோனா மாதிரிப்படம்.

பிரிட்டனில் அதிகரிக்கும் கொரோனா மாதிரிப்படம்.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 34,490 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 77 லட்சத்து 022 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 15,63,641 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

  • Share this:
    இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,329 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 94,06,001 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 214 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 338 ஆக உயர்ந்துள்ளது.

    இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 34,490 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 77 லட்சத்து 022 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 15,63,641 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    செவ்வாய்க்கிழமை 262 பேர் பலியானதிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் மரண விகிதம் குறைந்துள்ளது 214 ஆகக் குறைந்துள்ளது. புதனன்று 217 ஆக மரண விகிதம் இருந்தது. பிரிட்டனில் இதுவரை 1 லட்சத்து 42, 338 பேர் கொரோனவுக்கு பலியாகியுள்ளனர்.

    இந்தியாவில் கொரோனா நிலவரம்:

    இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 13,091 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,38,556 ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த 266 நாட்களில் இல்லாத அளவு குறைந்த எண்ணிக்கையாகும்.

    குணமடைந்தோர் விகிதம் 98.15% ஆக உள்ளது. இது கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகுஇதுவே அதிகமான அளவாகும். கடந்த 24 மணி கொரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.

    அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 13,091 இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,44,01,670 இதுவரை குணமடைந்தோர்: 3,37,87,047குணமடைந்தோர் விகிதம் 98.15% கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 13,878, கொரோனா உயிரிழப்புகள்: 462,189. கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 340.

    சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,38,556; இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,10,23,34,225; இதுவரை மொத்தம் 61,99,02,064 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இன்று ஒரு நாளில் கோவிட் பரிசோதனை செய்யப்பட்ட எண்ணிக்கை : 11,89,470.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: