சென்னையில் ஐடி நிறுவனத்தில் 40 பேருக்கு கொரேனா... 1100-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பரிசோதனை

மாதிரி படம்

சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த ஐடி நிறுவனத்திற்குட்பட்ட, 3 அலுவலகங்களில் பணிபுரியும் சுமார் 1100க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.

 • Share this:
  சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் 40 பேருக்கு தொற்று பரவியதை தொடர்ந்து அதே நிறுவனத்தில் பணிபுரியும் 1,100க்கும் மேற்ட்ட ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

  சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் ஐடி நிறுவனத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தனர்.

  இதில் 25 முதல் 28 வயதுடைய 40 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த ஐடி நிறுவனத்திற்குட்பட்ட, 3 அலுவலகங்களில் பணிபுரியும் சுமார் 1100க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 140 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
  Published by:Vijay R
  First published: