தமிழகத்தில் தொடர்ந்து உச்சம் தொடும் கொரோனா... 59 பேர் உயிரிழப்பு - இன்றைய அப்டேட்

தமிழகத்தில் தொடர்ந்து உச்சம் தொடும் கொரோனா... 59 பேர் உயிரிழப்பு - இன்றைய அப்டேட்

கொரோனா

சென்னையில் அதிகபட்சகமாக 3789 பேருக்கு செங்கல்பட்டில் 906 பேருக்கும் கோவையில் 689 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 7526 கொரேனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 59 பேர் உயிரிழந்துள்ளனர்.

  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரேனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 59 பேர் உயிரிழந்துள்ளனர்.

  இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 12,652  பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சகமாக 3789 பேருக்கு செங்கல்பட்டில் 906 பேருக்கும் கோவையில் 689 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரேனாாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,37,711 ஆக அதிகரித்துள்ளது.

  தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 7,526 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 9,34,966 பேர் கொரோனாவிலிருந்து விடுப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா சிகிச்சை பலனின்றி 59 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த கொரோனா உயிரிழப்பு 13,317 ஆக அதிகரித்துள்ளது.
  Published by:Vijay R
  First published: