தமிழகத்தில் 8 பேருக்கு கொரோனா அறிகுறி... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

தமிழகத்தில் 8 பேருக்கு கொரோனா அறிகுறி... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
மாதிரிப்படம்
  • Share this:
தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள சூழலில், கொரோனா அறிகுறிகளுடன் 8 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மருத்துவக்கல்லூரிகள் தவிர்த்து அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கபட்டு உள்ளது.

திரையரங்கு, வணிக வளாகம், பூங்கா, உடற்பயிற்சி மையம், விளையாட்டு அரங்கு, கேளிக்கை விடுதி உள்ளிட்டவற்றை மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. டாஸ்மாக் பார்களும் மார்ச் 31 வரை மூடப்படுகின்றன. மக்கள் அதிகமாகக் கூடும் ஊர்வலம், பொதுக்கூட்டம்,மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


வழிபாட்டுத் தலங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. மண்டபங்களில் ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்வுகள் தவிர புதிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே, தமிழகத்துக்கு சுற்றுலா வந்த 6 தாய்லாந்து நாட்டவர் உள்பட எட்டு பேருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading