கேரளாவில் கொரோனா பாதிப்பு எகிறிக்கொண்டிருப்பதால் மே-8ம் தேதி முதல் 16ம் தேதி வரை முழுலாக் டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 42, 000 புதிய தொற்றுக்களுடன் அதிகம் பாதித்த 10 மாநிலங்களில் மகாராஷ்டிரா, உ.பி. கர்நாடகாவுக்கு அடுத்தபடியாக உள்ளது. இதனையடுத்து மே மாதம் 8-ம் தேதி முதல் 16ம் தேதி வரை மாநிலம் முழுதும் முழு லாக் டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 42000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 9 நாட்கள் கடும் முழு லாக் டவுன் கேரளா மாநிலம் முழுதும் விதிவிலக்கின்றி மே-8ம் தேதி சனிக்கிழமை காலை 6 மணி முதல் தொடங்குகிறது, தற்போது கேரளாவில் லாக்டவுன் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் உள்ளது. வார இறுதி நாட்களில் பாதி ஊரடங்கு நிலை இருந்து வந்தது.
கேரளாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையும் 5,565 ஆக அதிகரித்தது.
மினி லாக் டவுன் அல்லது தளர்வுகளுடனான லாக்டவுன் பெரிய அளவில் பயனளிக்கவில்லை என்று போலீஸ் அறிக்கையையடுத்து முதல்வர் பினராயி விஜயன் முழுலாக் டவுன் முடிவுக்கு வந்திருக்கலாம் என்று கேரள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் அனுமதி நிலவரம் கையை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. எர்ணாக்குளம், கோழிக்கோட்டில் 50,000த்திற்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோழிக்கோட்டில் மட்டும் அதிகபட்சமாக 50865 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். எர்ணாக்குளத்தில் 58,378 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மலப்புரம், திருச்சூரிலும் 40,000த்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்ச்சைப் பெற்று வருகின்றனர். திருவனந்த புரம் (31,179), பாலக்கடு (26,800), கண்ணூர் (24359), ஆலப்புழா (22,333) ஆகியவற்றிலும் மருத்துவமனைகளில் நெரிசல் அதிகம் காணப்படுகிறது.
கேரளா முழுதும் சுமார் 3.8 லட்சம் கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஐசியுவில் 2033 நோயாளிகள் உள்ளனர். வெண்டிலேட்டர் உதவியுடன் 818 நோயாளிகள் இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
ஆனாலும் கேரளாவில் டெல்லி, உ.பி. கர்நாடகா போல் படுக்கை தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்ற பதற்ற நிலை இல்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Kerala, Kerala cm, Kerala CM Pinarayi Vijayan, Lockdown