உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 35 லட்சத்தைக் கடந்தது..!
Corona Virus Update | அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 11 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், உயிரிழப்பு 67 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா
- News18 Tamil
- Last Updated: May 4, 2020, 7:57 AM IST
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 லட்சத்தையும், குணமடைந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்தையும் கடந்துள்ளது.
கொரேனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சீனாவில் பரவ தொடங்கிய இந்த வைரஸ் தற்போது 200 நாடுகளுக்கு மேல் தடம்பதித்துள்ளது.
சீனாவில் தற்போது இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டாலும் மற்ற நாடுகளில் இதன் தாக்கம் மிக மோசமாக உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரேப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் உச்சத்தை அடைந்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 11 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், உயிரிழப்பு 67 ஆயிரத்தை தாண்டியுள்ளது. எனினும் அமெரிக்காவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது.
இத்தாலியை தொடர்ந்து பிரிட்டனிலும் உயிரிழப்பு 28 ஆயிரத்தை கடந்துள்ளது. அதுமட்டுமின்றி பிரிட்டனில் பாதிப்பும் தீவிரமடைந்து வருகிறது. அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஸ்பெயினில் உயிரிழப்பு 25 ஆயிரத்தையும், பிரான்சில் உயிரிழப்பு 24 ஆயிரத்தையும் கடந்துள்ளது. ஈரான் மற்றும் பிரேசிலில் பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது.
கொரேனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சீனாவில் பரவ தொடங்கிய இந்த வைரஸ் தற்போது 200 நாடுகளுக்கு மேல் தடம்பதித்துள்ளது.
சீனாவில் தற்போது இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டாலும் மற்ற நாடுகளில் இதன் தாக்கம் மிக மோசமாக உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரேப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் உச்சத்தை அடைந்து வருகிறது.