Home /News /coronavirus-latest-news /

கொரோனா பாதிப்பு : இந்தியாவின் தற்போதைய நிலை..? - முழு விவரம்

கொரோனா பாதிப்பு : இந்தியாவின் தற்போதைய நிலை..? - முழு விவரம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், ஊரடங்கை மீறுவோர் அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.  இந்தியாவில் இதுவரை 1024 பேர் பாதிக்கப்பட்டும், 27 பேர் உயிரிழந்தும், 95 பேர் குணமடைந்து உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 106 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 6 பேர் உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 35 ஆயிரம் பேரின் ரத்தமாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த 5 நாட்களில் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் ஒன்றேகால் லட்சம் பெட்டிகளில் ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 196 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  கேரளாவில் 182 பேரும், கர்நாடகாவில் 76 பேரும், தெலங்கானாவில் 66 பேரும், உத்தர பிரதேசத்தில் 55 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் 54 பேரும், குஜராத்தில் 53 பேரும், தமிழகத்தில் 50 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல் டெல்லியில் 39பேர், பஞ்சாப்பில் 38 பேர், ஹரியானாவில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பாதிக்கப்பட்டவர்களில் 87 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 25 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே துணை ராணுவப்படையினர் தங்கள் ஒருநாள் ஊதியத்தை பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். மொத்த தொகை 116 கோடி ரூபாய்க்கான காசோலையை அதிகாரிகள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வழங்கினர்.

ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இணை அமைச்சர் சுரேஷ் அங்காதி ஆகியோர் தங்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக அறிவித்துள்ளனர். ரயில்வே ஊழியர்களின் ஒருநாள் ஊதியத் தொகையையும் சேர்த்து 151 கோடி ரூபாய் பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட உள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஊரடங்கை மாநிலங்கள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  விதிகளை மீறுவோரை 14 நாட்கள் அரசு முகாம்களில் தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் வேறு இடங்களுக்கு செல்வதை மாநிலங்கள் தடுக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.











சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Vijay R
First published:

Tags: CoronaVirus

அடுத்த செய்தி