என் குழந்தைகளை கட்டிப்பிடிக்கக் கூட முடியவில்லை - கொரோனா பாதித்த நடிகை வேதனை

என் குழந்தைகளை கட்டிப்பிடிக்கக் கூட முடியவில்லை - கொரோனா பாதித்த நடிகை வேதனை

மகன் உடன் நடிகை மலைக்கா அரோரா

கொரோனா தொற்று பாதித்திருப்பதால் தனது குழந்தைகளைக் கூட கட்டிப்பிடிக்க முடியவில்லை என்று நடிகை மலைக்கா அரோரா வேதனை தெரிவித்துள்ளார்.

 • Share this:
  அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், இயக்குநர் ராஜமவுலி உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி மீண்டு வந்துள்ளனர்.

  கடந்த வாரம் போனி கபூரின் மகனும் நடிகருமான அர்ஜூன் கபூர், அவரது காதலி மலைக்கா அரோரா ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் அவரவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

  கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால் தனது மகன் அர்கான் மற்றும் தனது செல்லப் பிராணியைக் கட்டிப் பிடிக்க முடியவில்லை என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் மலைக்கா அரோரா வேதனை தெரிவித்துள்ளார். தனது பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “சமூக விலகல், தனிமைப்படுத்துதல் காரணமாக இன்னும் சில நாட்கள் என் குழந்தைகளை கட்டிப்பிடிக்க முடியாது. இருந்தாலும் அவர்களது முகங்களைப் பார்க்கும் போது எனக்கு சக்தியையும், உற்சாகத்தையும் தருகிறது” என்று கூறியுள்ளார்.
  அவரது கருத்தைக் குறிப்பிட்டு ஆறுதல் தெரிவித்திருக்கும் நடிகை பிபாஷா பாசு, “நீங்கள் மிகவும் வலிமையானவர். விரைவில் உங்கள் குழந்தைகளை கட்டி அணைப்பீர்கள்” என்று கூறியுள்ளார்.  பாலிவுட் படங்களில் நடித்து வரும் மலைக்கா அரோரா, மணிரத்னம் இயக்கிய ‘உயிரே’ படத்தில் தைய தையா தய்யா பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார்.
  Published by:Sheik Hanifah
  First published: