தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 48 பேர் பலி... 11 ஆயிரத்தை நெருங்கிய தொற்று

தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 48 பேர் பலி... 11 ஆயிரத்தை நெருங்கிய தொற்று

மாதிரி படம்

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 6250 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 9,20,369 பேர் கொரோனாவிலிருந்து விடுப்பட்டுள்ளனர்.

  • Share this:
    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவிலிருந்து 6,250 பேர் குணமடைந்துள்ள நிலையில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரேனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 10986 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சகமாக 3711 பேருக்கு செங்கல்பட்டில் 1029 பேருக்கும் கோவையில் 686 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரேனாாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,13,378 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 6250 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 9,20,369 பேர் கொரோனாவிலிருந்து விடுப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா சிகிச்சை பலனின்றி 48 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த கொரோனா உயிரிழப்பு 13,205 ஆக அதிகரித்துள்ளது.
    Published by:Vijay R
    First published: