Tamil Nadu Night Curfew | தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்... போலீசார் தீவிர கண்காணிப்பு

Tamil Nadu Night Curfew | தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்... போலீசார் தீவிர கண்காணிப்பு

மாதிரி படம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

  • Share this:
    தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. நோய் தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, தனியார், பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் பிற வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. அவசர மருத்துவ தேவைகள், பால், மருந்து விநியோகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விமான நிலையம், ரயில் நிலையம் செல்வதற்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்களுக்கு அனுமதி உண்டு. தமிழகத்தில் இன்று முதல் அனைத்து சுற்றுலாத்தலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடற்கரை பகுதிகள், பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் போன்ற இடங்களுக்கு செல்லவும் அனுமதியில்லை. பொது இடங்களுக்கு செல்லும் போது மக்கள் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இரவு நேர ஊரடங்கின் போது சென்னையில் 200 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொள்வார்கள் என, காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
    Published by:Vijay R
    First published: