நாகை மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரை மொத்த பாதிப்பு ஆயிரத்தைத் தொட்டுள்ளது. இந்தச் சூழலில், நாகை நகராட்சி அலுவலகத்தில் சுகாதார மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றுவரை அவர் பணிக்கு வந்து சென்றிருப்பதால், நாகை நகராட்சி அலுவலகத்தை எதிர்வரும் 12-ஆம் தேதி வரை மூட நாகை நகராட்சி ஆணையர் ஏகராஜ் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகம் மற்றும் அதிகாரிகளின் அறைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் துப்புரவுப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Also read: பணியின்போது உயிரிழந்த காவலர்: 12 லட்சத்து 50,000 நிதி திரட்டி காசோலை வழங்கிய சக காவலர்கள்..
மேலும், தொற்று உறுதியாகியுள்ள அரசு ஊழியரோடு தொடர்பில் இருந்தவர்கள் தம்மை கொரோனா பரிசோதனை செய்துகொள்ள உள்ளனர். ஏற்கனவே நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூன்று நாளைக்கு மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது நகராட்சி அலுவலகமும் மூடப்படுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
நாகை மீன்பிடி துறைமுகம் நாளை முதல் மூடப்படுவதாக மீன்வளத்துறை இணை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் நாகை மீனவர்கள் நாளைமுதல் கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.