50 ஆயிரத்தை நெருங்கிய உயிரிழப்பு: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சமாக உயர்வு - கொரோனாவால் திணறும் பிரேசில்

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு 10 லட்சத்தைக் கடந்த நாடாக பிரேசில் உருவெடுத்துள்ளது.

50 ஆயிரத்தை நெருங்கிய உயிரிழப்பு: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சமாக உயர்வு - கொரோனாவால் திணறும் பிரேசில்
பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. (படம்: Reuters)
  • Share this:
பிரேசிலில் முதன்முதலாக கொரோனா தொற்று பிபர்வரி 26ம் தேதி கண்டறியப்பட்டது. முதல் தொற்று உறுதி செய்யப்பட்டது முதலே, பிரேசிலில் தொற்று பரவல் தீவிரமாகக் காணப்பட்டது. நாள்தோறும் அதிகரித்து வந்த பாதிப்பு மே 3ம் தேதி ஒரு லட்சத்தைக் கடந்தது. ஒரு லட்சத்தைத் தொட 67 நாட்கள் ஆன நிலையில், அடுத்த 11 நாட்களில் அதாவது மே 14ம் தேதி 2 லட்சத்தைக் கடந்தது. அடுத்த 17 நாட்களில், பாதிப்பு 5 லட்சத்தை கடந்தது.

தற்போது 19 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்து 10 லட்சத்தைக் கடந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையிலும் பிற நாடுகளை விட அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடாகவே பிரேசில் உள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசிலின் உயிரிழப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் வழங்கிய அறிவுறுத்தல்களை, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சினோரா அலட்சியப்படுத்தியதே தொற்று தீவிரமடையக் காரணம் எனப் புகார் எழுந்துள்ளது. பிரேசிலில் உள்ள 27 மாநிலங்களில் 24 மாநிலங்கள் தனிமனித இடைவெளியைப் பின்பற்றியபோது, மாநிலங்களின் நடவடிக்கை பொருளாதாரத்தை பாதிக்கும் என பிரேசில் அதிபர் தெரிவித்தார். கொரோனாவை பிரேசில் முறையாகக் கையாளவில்லை என்ற உலக சுகாதார நிறுவனத்தின் குற்றச்சாட்டை, அந்நாடு மறுத்தது.


Also see:

பாதிப்புகளைக் கண்காணிக்கும்போது 10 லட்சம் பாதிப்புகள் என்பது மிகக்குறைவான எண்ணிக்கையே என்றும், உண்மையான பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சம் வரை இருக்கும் என்றும் பிரேசிலைச் சேர்ந்த மருத்துவ பேராசிரியர் அலக்சாண்டர் நைமி பர்போசா தெரிவித்துள்ளார்.பாதிப்புகள் 10 லட்சத்தைக் கடந்துள்ளபோதிலும், குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது சற்றே ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.
First published: June 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading