கொரோனா வைரஸ் விந்து வீரியத்தை அழிக்கலாம்; ஆண்மைக் குறைபாட்டை ஏற்படுத்தலாம்: புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

கொரோனா வைரஸ்

ஏற்கெனவே காய்ச்சல் தொடர்பான நோய்களினால் விந்து உற்பத்தியில் தாக்கம் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறியுள்ள நிலையில் இந்த ஆய்வு கோவிட் 19-னால் ஆண்மைக் குறைபாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

 • Share this:
  கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 ஆண்மைக் குறைபாட்டை ஏற்படுத்தலாம், ஆண் விந்துவின் வீரியத்தை இழக்கச் செய்யலாம் என்று புதிய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

  கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் முதல் உலகையே உருக்குலைத்து வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 2.2 மில்லியன் பேர் பலியாகியுள்ளனர். இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஆண்களில் விந்துவின் உயிர்ச்சத்து சேதமாகலாம் ஆண்மைக் குறைவை ஏற்படுத்தலாம் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது, இது தொடர்பான கட்டுரை ரீபுரொடக்‌ஷன் என்ற இதழில் வெளியாகியுள்ளது.

  பிரான்ஸைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுவது என்னவெனில், “பரிசோதனையில் கிடைத்த ஆதாரங்களின்படி கோவிட்-19 வைரஸ் தாக்கினால் ஆண்களில் விந்து சக்தி குறைபாடு ஏற்பட்டு ஆண்மைக் குறைபாடு ஏற்படுவது தெரியவருகிறது.” என்று கூறுகின்றனர்.

  ஆனால் இந்த ஆய்வு முடிவு குறித்து மற்ற நிபுணர்கள் கூறும்போது, கொரோனா வைரஸினால் விந்து வீரியம் குறையும் என்பது நிரூபிக்கப்படாத ஒன்று என்று மறுக்கின்றனர்.

  கோவிட் 19 மூச்சுக்குழல், நுரையீரல் தொடர்பான பிரச்சிகளைத்தான் உருவாக்கும். அதுவும் வயதானவர்களையே அதிகம் பாதிக்கிறது.

  மூச்சுக்குழலிலிருந்து வெளிப்படும் துளிகளினால் நுரையீரல், கிட்னி, குடல், இருதயம் பாதிக்கப்படுகிறது. ஆனால் தற்போது ஆணின் குழந்தைப் பிறப்பு மறு உற்பத்தி ஹார்மோன்களையும் கோவிட் 19 பாதிக்கும் என்று இந்த ஆய்வு அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. நுரையீரல் திசுக்களில் காணப்படும் கொரோனா வைரஸ் ஆண் விந்தணுக்களிலும் காணப்படுகிறது என்று ஏற்கெனவே வந்த ஆய்வுகளும் கூறுகின்றன.

  மேலும் படிக்க.... கொரோனா பயங்கரம்: பிரேசிலில் ஆக்சிஜனுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

  கோவிட்-19 நோயாளிகளில் நோய் தாக்கிய தருணங்களில் ஆண்மைக் குறைபாடு, விந்தணு வீரியம் குறையும் என்றாலும் கோவிட்டிலிருந்து குணம்பெற குணம்பெற விந்தணுவின் வீரியமும் மேம்படும் என்று இந்த ஆய்வு நம்பிக்கை அளிக்கிறது.

  கோவிட் 19 தொற்று செல்லும் பாதை ஆண் குழந்தைப் பிறப்பு மறு உற்பத்தி உறுப்புகள் வழியே என்பதால் அதிக ரிஸ்க் உள்ளது என்று உலகச் சுகாதார அமைப்பு ஏற்கெனவே கூறியிருப்பதாக இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

  ஏற்கெனவே காய்ச்சல் தொடர்பான நோய்களினால் விந்து உற்பத்தியில் தாக்கம் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறியுள்ள நிலையில் இந்த ஆய்வு கோவிட் 19-னால் ஆண்மைக் குறைபாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
  Published by:Muthukumar
  First published: