முகப்பு /செய்தி /கொரோனா / Corona Updates | COVID-19 | கொரோனாவினால் எழும் புதிய ஆபத்து: குணமடைந்தவர்களுக்கு ஏற்படும் திடீர் இருதய நோய், நுரையீரல் ரத்தக்கட்டு, ஸ்ட்ரோக் அறிகுறிகள்

Corona Updates | COVID-19 | கொரோனாவினால் எழும் புதிய ஆபத்து: குணமடைந்தவர்களுக்கு ஏற்படும் திடீர் இருதய நோய், நுரையீரல் ரத்தக்கட்டு, ஸ்ட்ரோக் அறிகுறிகள்

கொரோனா

கொரோனா

உலகிலேயே கொரோனா வைரஸ் கிருமித்தொற்றுகு பெரிய அளவில் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கொரோனாவினால் இன்னொரு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உலகிலேயே கொரோனா வைரஸ் கிருமித்தொற்றுகு பெரிய அளவில் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கொரோனாவினால் இன்னொரு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கோவிட் 19-லிருந்து சிகிச்சைப் பெற்று நல்லபடியாக வீடு திரும்பியவர்களுக்கு நெஞ்சுவலி, இருதயப் பிரச்னைகள், ரத்தக் கட்டு, மற்றும் ஸ்ட்ரோக் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் ஆய்வில் தெரியவந்துள்ளன.

இது தொடர்பாக அமெரிக்காவில் 30 நிபுணர்கள் அடங்கிய பல்துறை வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டு ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகள் Nature Medicine என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது.

அதாவது நரம்பியல், இருதயவியல், கிட்னி மற்றும் வயதானோருக்கான நோயியல் நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய பலதரப்பட்ட குழு ஆய்வு நடத்தியது. கொலம்பிய பல்கலைக் கழகத்தின் இருதய துறையின் விவரங்களின்படி கோவிட் 19-லிருந்து குணமடைந்த இருவாரங்களில் 20% பேருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் தெரியவந்த இன்னொரு ஆபத்து என்னவெனில் முன்பு சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கும் கொரோனா குணமடைந்த பிறகு சர்க்கரை நோய் இருப்பதும் தெரியவந்துள்ளது. சிறிய எண்ணிக்கையாக இருப்பினும் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் சிலருக்கு ஸ்ட்ரோக், நுரையீரல் ரத்தக்கட்டு, மற்றும் சில சிக்கல்கள் உருவாகியுள்ளது என்று இந்த ஆய்வு கூறுகிறது.

நீண்ட நாளைய நோய் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு உடல்நலப் பிரச்னைகள் இருக்கிறது என்றாலும் இந்தப் பிரச்னைகள் கோவிட் 19-க்குப் பிறகும் தோன்றுகிறது என்பதுதான்.

இது தொடர்பாக கொலம்பியா பல்கலைக் கழக எலைன் ஒய்வான் என்பவர் கூறும்போது, “அதாவது கொரோனா பாதிப்புக்கு முன் எந்த ஒரு நோயும் இல்லாதவர்களுக்கும் கூட கொரோனா வந்து போன பிறகு நுரையீரல் ரத்தக்கட்டு, இருதயத்துடிப்பின் அதிவேகம் போன்ற சிக்கல்கள் தோன்றுகின்றன, இவர்கள் பலவீனமானவர்கள் அல்ல, ஆரோக்கியமானவர்கள்” என்கிறார்.

கொரோனா இருக்கும் போது இதே அறிகுறிகள் சிலருக்கு இருந்தாலும் கொரோனா குணமடைந்து இரு மாதங்களுக்குப் பிறகும் கூட இருதயத் துடிப்பு அதிகரிப்பு, நடுக்கம், நீண்ட களைப்பு ஏற்படுவதை கண்டுள்ளோம் என்கிறார் அவர்.

அதாவது நம் இருதயத் துடிப்பை ஒருங்கிணைக்கும் மின் தூண்டுதல்கள் சரியாக வேலை செய்யாமல் தோன்றும் arrhythmias என்ற பிரச்னையால் இருதயம் வேகமாக துடிக்கும் அல்லது மெதுவாகத் துடிக்கும், இயல்பாக இருக்காது. இது ஸ்ட்ரோக்கில் கொண்டு போய் விடும், இருதய நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமாகும். இருதயத்தில் நீண்ட நாட்களுக்கான சேதத்தை ஏற்படுத்திவிடும், இது நம்மில் பலருக்கும் தெரியாது.

கோவிட் 19 நோய் தாக்கும் போது இருக்கும் நோய்க்கூறுகளுடன் ஒப்பிட முடியாத புதிய நோய் அறிகுறிகள் தோன்றுகின்றன. சில கொரோனா நோயாளிகள் குணமடைந்த பிறகு நீண்ட நாட்கள் சென்ற பிறகும் கூட மறதி அதிகமாவதாகவும், கவனம் செலுத்த முடியாத தன்மையும் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த ஆய்வு என்ன கூறுகிறது என்னவெனில் கொரோனாவிலிருந்து குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார் என்பதற்காக சிகிச்சை முடிந்து விட்டதாக கருத இடமில்லை என்கிறது.

அதாவது வெறும் கோவிட்19 என்பது மட்டுமல்லாமல் பலதுறை நிபுணத்துவம் தேவைப்படுகிறது இதனைக் கையாள என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

கோவிட் 19 நோய்க்கென்றே பிரத்யேக மருத்துவமனைகளை உருவாக்கி அவர்களை தொடர் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்கின்றனர்.

First published:

Tags: America, Corona impact, NewYork