கர்நாடகாவில் ’முகக்கவச தினம்’ - விழிப்புணர்வு நடைபயணத்தில் முதல்வர், பிரபலங்கள் பங்கேற்பு

கர்நாடகாவில் இன்று ’முகக்கவச தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு நடைபயணத்தில் அமைச்சர்கள், பிரபலங்கள் பலர் பங்குக்கொண்டனர்.

கர்நாடகாவில் ’முகக்கவச தினம்’ - விழிப்புணர்வு நடைபயணத்தில் முதல்வர், பிரபலங்கள் பங்கேற்பு
பிரபலங்களுடன் மாநில முதலமைச்சர் எடியூரப்பா.
  • Share this:
கொரோனா பரவலையொட்டி முகக்கவசம் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் இன்று கர்நாடக மாநிலம் முழுவதும் “முகக்கவச தினம்” கடைபிடிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறுகையில், ”கொரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதில் முகக்கவசம் முக்கியப் பாங்காற்றுகிறது. அதனால் முகக்கவசம் அணிந்து கொரோனாவிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வோம்” என்றார்.

முதலமைச்சர் எடியூரப்பா, மாநில அமைச்சர்கள், பிரபலங்கள் எனப் பலர் ஒன்றிணைந்து விதானா சவுதா எனும் பகுதியிலிருந்து கப்பன் பூங்கா வரை நடைபயணமாகச் சென்றனர். அதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே, கன்னடத் திரைப்பட நடிகர் புனீத் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முதலமைச்சர் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கினார்.


Also see:

கர்நாடகாவில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருப்பதுடன், அணியாதோருக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தற்போது 2,800ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
First published: June 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading