ஹைட்ராக்ஸிகுளோரோகின் மருந்து ஏற்றுமதிக்கு தடை - மத்திய அரசு

புதிதாக ஏற்றுமதி செய்ய இனி அனுமதி கிடையாது

ஹைட்ராக்ஸிகுளோரோகின் மருந்து ஏற்றுமதிக்கு தடை - மத்திய அரசு
கோப்புப் படம்
  • Share this:
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு தடுப்பு மருந்தாக ஹைட்ராக்ஸிகுளோரோகின் மருந்தை பயன்படுத்தலாம் என்று  மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்  கூறியதால், அந்த மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகின் என்ற மருந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி அளித்தது.

இந்த மருந்து தற்போது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் சூழல் எதிர்காலத்தில் உருவாகலாம். இதனை கருத்தில் கொண்டு ஹைட்ராக்ஸிகுளோரோகின் மற்றும் அதனைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மருந்துகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.


அதே சமயம் மனிதாபிமான அடிப்படையில் மற்ற நாடுகளுக்கு இந்திய அரசாங்கம் இந்த மருந்தை வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. புதிய ஏற்றுமதிக்கு மட்டுமே இனி அனுமதி வழங்கப்படாது என்று கூறியுள்ளது.

Also see...இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்