இந்தியாவில் பயன்பாட்டுக்கு வருகிறது ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி...

இந்தியாவில் பயன்பாட்டுக்கு வருகிறது ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி...

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டுக்கு வல்லுநர் குழு அனுமதி வழங்கி உள்ளது.

 • Share this:
  இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. தற்போது, சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளன. அதேநேரத்தில், தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பல மாநிலங்கள் தெரிவித்து உள்ளன. இதனையடுத்து, தடுப்பு மருந்து உற்பத்தியை விரைவுபடுத்தும்படி மத்திய அரசு கேட்டு கொண்டு உள்ளது.

  இந்தநிலையில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசி மருந்தை இந்தியாவிலும் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டுமென கோரி டாக்டர் ரெட்டி நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது. அதன்படி மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அவசர கால பயன்பாட்டுக்காக ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு அனுமதி அளித்துள்ளது.

  மேலும் படிக்க... இந்தியாவில் அக்டோபருக்குள் மேலும் 5 கொரோனா தடுப்பூசிகள்.. மத்திய அரசு தகவல்..

  இதனையடுத்து இந்த மருந்து தயாரிப்பு பணிகள் அடுத்த 3 வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. ஸ்புட்னிக் மருந்து கொரோனா பாதிப்பை 90 சதவீதம் குணப்படுத்தும் திறன் கொண்டது என மருந்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

  இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்திற்குள் மேலும் 5 கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: