COVID-19 in India: ஒரே நாளில் உச்சம்- 3,52,991 பேருக்குக் கொரோனா- 2,812 பேர் மரணம்

COVID-19 in India: ஒரே நாளில் உச்சம்- 3,52,991 பேருக்குக் கொரோனா- 2,812 பேர் மரணம்

மாதிரி படம்

திங்களன்று இந்தியாவில் கொரோனா வைரஸ் புதிதாகத் தொற்றியுள்ளோர் எண்ணிக்கை அனைத்து கால உச்சத்தைத் தொட்டு 3,52,991 பேருக்கு புதிதாகத் தொற்ற பலி எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,812 ஆக இருந்தது.

  • Share this:
    திங்களன்று இந்தியாவில் கொரோனா வைரஸ் புதிதாகத் தொற்றியுள்ளோர் எண்ணிக்கை அனைத்து கால உச்சத்தைத் தொட்டு 3,52,991 பேருக்கு புதிதாகத் தொற்ற பலி எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,812 ஆக இருந்தது.

    இதன் மூலம் இந்தியாவின் கொரோனா கேஸ் சுமை 1.73 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவரை 1.95 லட்சம் பேர் உயிர்களை கொரோனா பறித்துச் சென்றுள்ளது.

    இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

    கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று: 3,52,991 இதுவரை ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பு: 1,73,13,163 . 24 மணி நேரத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை: 2,19,272

    இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 1,43,04,382 கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை: 2812. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை: 1,95,123

    சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை: 28,13,658 கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மொத்த எண்ணிக்கை: 14,19,11,223.

    முக்கிய அம்சங்கள்:

    தொடர்ந்து 5வது நாளாக வைரஸ் தொற்று எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 72 மணி நேரத்தில் 10 லட்சம் கொரோனா தொற்றுக்கள் பதிவாகியுள்ளது. ஆங்காங்கே ஆக்சிஜன் ஃபில் செய்வதற்கு கடும் நெரிசல் காணப்படுகிறது உறவினர்கள் தங்கள் குடும்பத்தில் பாதிக்கப்பட்டோரின் உயிரைக் காப்பாற்ற மணிக்கணக்கில் கியூவில் நின்று ஆக்சிஜன் பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் இந்தியாவுக்கு மருத்துவ உதவிகள், மருத்துவ உபகரணங்கள், வெண்டிலேட்டர்கள், பிபிஇ கவச உடைகள், வாக்சின் இடுபொருட்களை உடனடியாக அவசரமாக அனுப்புவதாக அமெரிக்கா உறுதியளித்ததோடு, இந்திய மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

    உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், வெண்ட்டிலேட்டர்கள், பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளன.

    ஐரோப்பிய யூனியன், இஸ்ரேல், ஜெர்மனி ஆகியவையும் இந்தியாவுக்கு உதவியுள்ளன.

    நாடு முழுதும் பிஎம் கேர்ஸ் நிதியை வைத்து 551 மெடிக்கல் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    டெல்லி மே 3ம் தேதி வரை லாக்டவுனை நீட்டித்துள்ளது.

    உலகம் முழுதும் இதுவரை 100 கோடிபேருக்கு வாக்சின் போடப்பட்டுள்ளது. இதுவரை 14 கோடி பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
    Published by:Muthukumar
    First published: