ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 1.2 லட்சம் பேருக்கு உணவளிக்கும் ஹ்ரித்திக் ரோஷன்

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 1.2 லட்சம் பேருக்கு உணவளிக்கும் ஹ்ரித்திக் ரோஷன்
நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்
  • Share this:
ஊரடங்கால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள 1.2 லட்சம் ஆதரவற்ற மக்களுக்கு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து உணவு வழங்க நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் முடிவு செய்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தக் கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் 5274 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 410 பேர் குணமடைந்துள்ளனர். 149 பேர் மரணமடைந்துள்ளனர். தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் வரும் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.


இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க நிதி உதவி அளிக்குமாறு மக்களிடம் மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை வைத்திருந்தன. அதற்கேற்ப கொரோனா தடுப்பு பணிகளுக்கு திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இதுதவிர்த்து திரைத்துறையினர் சிலர் தாங்களாகவே முன்வந்து ஆதரவற்ற மக்களுக்காக உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தான் வசிக்கும் பகுதியில் இருக்கும் 250 ஏழைக் குடும்பங்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஊரடங்கால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள 1.2 லட்சம் ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்க முடிவு செய்துள்ளார். இந்த பணியை அவர் அக்‌ஷய பாத்ரா என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளார்.இதற்காக அக்‌ஷய பாத்ரா நிறுவனம் ஹ்ரித்திக் ரோஷனுக்கு நன்றி தெரிவித்துள்ளது. அதற்கு பதிலளித்துள்ள ஹ்ரித்திக் ரோஷன், நாட்டில் யாரும் பசியுடன் தூங்குகிறார்களா என்பதை உறுதி செய்வதற்கான சக்தியை நீங்கள் பெற விரும்புகிறேன். நீங்கள் தான் களத்தில் இருக்கும் உண்மையான சூப்பர் ஹீரோக்கள். நம்மால் என்ன செய்யமுடியுமோ அதை தொடர்ந்து செய்வோம். யாருடைய பங்கும் பெரிதும் அல்ல, சிறிதும் அல்ல” என்று கூறியுள்ளார்.மேலும் படிக்க: ரூ.1.25 கோடி நிதி வழங்கிய அஜித்துக்கு நன்றி - அமைச்சர் கடம்பூர் ராஜூFirst published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading