நாடு முழுவதும் கோவிட் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. வைரஸால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபரின் உமிழ்நீர் துளிகள், இருமல், தும்மல் மூலம் மூக்கு, வாய் மற்றும் கண்கள் வழியாக மற்றொரு நபரின் உடலில் வைரஸ் நுழைகிறது.
பாதிக்கப்பட்ட நபருடன் நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளாத போதும், குறுக்கு காற்றோட்டம் இல்லாததால் ஏசி கேப், ஏசிபேருந்துகள், வணிக வளாகங்கள் மற்றும் தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் கூட வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் தான் தற்போது இவற்றுக்கு எல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் நிறைய பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர். வீட்டு தனிமைப்படுத்தலின் போது செய்யவேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை பற்றி பார்க்கலாம்.
வீட்டு சிகிச்சையில் செய்ய கூடியவை..
* பயணத்திற்கு மருத்துவ காரணம் இல்லாவிட்டால், எல்லா நேரத்திலும் வீட்டிலேயே இருங்கள்.
* கைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். உங்கள் கைகளுக்கு இடையில் மற்றும் விரல்களுக்கு அடியில் என நிறைய சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி 20 விநாடிகளுக்கு கைகளைக் கழுவி சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். சோப்பு இல்லையெனில் 60%-க்கும் அதிகமான ஆல்கஹால் கொண்ட ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசரை பயன்படுத்தி சாப்பிடுவதற்கு முன், முகத்தைத் தொடும் முன் என கைகளை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும்.
* இருமல் அல்லது தும்மல் வந்தால் கர்ச்சீப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
* கதவு மூடப்பட்ட தனி அறையில் இருப்பது மற்றவர்களுக்கும் பாதுகாப்பு. அதே போல தனி குளியலறையை பயன்படுத்துவது சிறந்தது.
* கதவு கைப்பிடிகள், கவுன்டர் டாப்ஸ், படிக்கட்டுகள் மற்றும் சுவிட்சுகள் உள்ளிட்ட அனைத்து மேற்பரப்புகளையும் சீரான இடைவெளியில் துடைத்து சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும்.
*தொலைபேசியை கிருமிநாசினி துடைப்பான்கள் அல்லது 70% ஐசோபிரைல் ஆல்கஹால் கொண்டு துடைக்கலாம்.
* தனிமையாக இருக்கும் அறையிலிருந்து வெளியேறினால் அல்லது குறிப்பிட்ட அறைக்குள் யாரேனும் நுழைந்தால் மாஸ்க் அணிவது கட்டாயம்.
* மாஸ்க் அணிவதற்கு முன் கைகளை கழுவ வேண்டும்.
* சீரான உணவை உட்கொள்வது, நீரேற்றத்துடன் இருப்பது, ஆல்கஹால் உட்கொள்வதை தவிர்ப்பது, போதுமான தூக்கம் மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிப்பது உள்ளோட்டவற்றில் ஈடுபடலாம். இதன் மூலம் நோய் எதிர்ப்பு பெருகும்.
* வறட்டு இருமல், மூச்சுத் திணறல், காய்ச்சல், சுவை மற்றும் வாசனை இழப்பு உள்ளிட்ட அறிகுறிகளை தினசரி கண்காணித்து கொள்ள விடும். உடலின் ஆக்ஸிஜன் செறிவூட்டலை கண்காணிக்க வீட்டில் விரல் துடிப்பு ஆக்சிமீட்டர் (finger pulse oximeter) வைத்திருப்பது நல்லது.
செய்யக்கூடாதவை:
* தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறோமே என பீதி அடையக்கூடாது
* பொது பகுதிகளுக்கு செல்வது, பொது போக்குவரத்தை பயன்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுதல் கூடாது. வீட்டு தலைமை என்றால் வீட்டிலேயே இருந்தால் தான் மற்றவருக்கும் தொற்று பரவுவதை தவிர்க்க முடியும்.
* யாரிடமும் கை குலுக்கவோ, கட்டிப்பிடிக்கவோ வேண்டாம். பாதிப்பு இல்லாதவருடன் 6-8 அடி தூரத்தை பராமரிக்க வேண்டும்
* கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு, வாய் அல்லது முகத்தைத் தொடாதீர்கள்
* தண்ணீர், பாத்திரங்கள், துண்டுகள் அல்லது படுக்கைகளை குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாது
* வயதான உறவினர்கள் அல்லது சமூக உறுப்பினர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதால் அவர்களைப் பார்க்க வேண்டாம்.
* மருத்துவர்கள் அறிவுறுத்தும் வரை சுய தனிமைப்படுத்தலை மீற வேண்டாம்.
பராமரிப்பாளர்களுக்கான வழிமுறைகள்:
* நோய்வாய்ப்பட்ட நபரை பார்த்து கொள்ளும் பராமரிப்பாளர் அவருடன் ஒரே அறையில் இருக்கும்போது சரியான முறையில் மூன்று அடுக்கு மாஸ்க்கை அணிய வேண்டும். மாஸ்க் ஈரப்பதமாகவோ அல்லது அழுக்காகவோ இருந்தால், அதை உடனடியாக மாற்ற வேண்டும்.
* உணவு தயாரிப்பதற்கு முன்னும் பின்னும், சாப்பிடுவதற்கு முன்பு, கழிப்பறையைப் பயன்படுத்தியபின், கைகள் அழுக்காகத் தோன்றும் போதெல்லாம் கை சுகாதாரம் கடைப்பிடிக்க வேண்டும். கை சுகாதாரத்திற்கு பிரத்யேக சுத்தமான துணி அல்லது துண்டுகளை பயன்படுத்த வேண்டும்.
* நோயாளியின் உடல் திரவங்களுடன், குறிப்பாக வாய்வழி அல்லது சுவாசத்துடன் நேரடி தொடர்பை தவிர்க்கவும். நோயாளியைக் கையாளும் போது கையுறைகளை பயன்படுத்த வேண்டும்.
* நோயாளி பயன்படுத்தும் பாத்திரங்கள் மற்றும் உணவுகளை சோப்பு / சோப்பு மற்றும் கையுறைகள் அணிந்த தண்ணீர் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். பாத்திரங்கள் மற்றும் உணவுகள் மீண்டும் பயன்படுத்தப்படலாம். கையுறைகளை கழற்றியபின் அல்லது பயன்படுத்திய பொருட்களை கையாண்ட பிறகு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
* நோயாளி பயன்படுத்தும் மேற்பரப்புகள், ஆடை ஆகியவற்றை சுத்தம் செய்யும் போது அல்லது கையாளும் போது மூன்று அடுக்கு மருத்துவ மாஸ்க் மற்றும் கையுறைகளை பயன்படுத்த வேண்டும்.
* பராமரிப்பாளரும் தங்களது ஆரோக்கியத்தை சுயமாக கண்காணிக்க வேண்டும் மற்றும் COVID-19 (காய்ச்சல் / இருமல் / சுவாசிப்பதில் சிரமம் / வாசனை மற்றும் சுவை இழப்பு) போன்ற அறிகுறிகள் அவர்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
* அறிகுறிகளால் பராமரிப்பாளர் பாதிக்கப்பட்டால் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Covid-19, Home Quarantine, Mask