மக்களின் இயல்புத் தன்மையை முடக்கிப் போட்டதோடு, 35 லட்சத்திற்கும் அதிகமானோரின் உயிரைப் பறித்துள்ளது கொரோனா வைரஸ். அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கடும் குற்றச்சாட்டுகளுக்கு பிறகு, உலக சுகாதார அமைப்பு கொரோனா உருவான இடம் தொடர்பாக சீனாவில் ஆய்வு மேற்கொண்டது. ஆனால், தொற்று ஊகான் ஆய்வகத்தில் உருவாக்கப்படவில்லை எனவும், இறைச்சி சந்தையில் இருந்து தான் பரவியது எனவும், அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனா உருவான விதம் தொடர்பாக, பிரிட்டனை சேர்ந்த பேராசிரியர் அங்கஸ் டால்லீஷ் (Angus Dalgleish) மற்றும் நார்வே ஆராய்ச்சியாளரும் மருத்துவருமான பிர்கர் சோரன்சென் (Birger Sorensen) ஆகியோர் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் வெளியாகியுள்ளது. அதில், சீனாவின் குகை வௌவால்களில் இயற்கையாக காணப்படும் கொரோனா வைரசின் முதுகெலும்பை எடுத்து, அதலிருந்து உயிர்கொல்லி மற்றும் அதிவேகமாக பரவக் கூடிய, தொற்று உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். ரிவர்ஸ் இன்ஜினியரிங் முறையில் விரிவான பரிசோதனையை மேற்கொண்டு இனப்பெருக்கம் செய்து இயற்கையாக உருவான வைரஸ் எனும் தோற்றத்தை சீன ஆராய்ச்சியாளர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க...கொரோனா காலத்தில் தாய் சேய் நலம் பேணுவது எப்படி?
கொரோனா மாதிரிகளில் வித்தியாசமான கைரேகைகளில் காணப்பட்டதாகவும், ஆய்வகங்களில் கையாண்டதன் மூலம் மட்டுமே அவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விளக்கமளித்துள்ளனர். சீனாவின் ஊகான் ஆய்வகத்தில் Gain of Function எனும் திட்டத்தில் தொற்று உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், அமெரிக்க பல்கலைக் கழங்களில் பணியாற்றிய சில சீன ஆராய்ச்சியாளர்கள் இதற்கான கருவிகளை உருவாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இயற்பியல் விதிகளின் படி, கொரோனா வைரசில் இருப்பது போன்று தொடர்ந்து நான்கு நேர்மறையான அமினோ அமிலங்கள் இருப்பது சாத்தியமில்லை எனவும், செயற்கையாக உற்பத்தி செய்தால் மட்டுமே அது சாத்தியம் என எடுத்துரைத்துள்ளனர்.
ஊகான் ஆய்வகத்தில் உள்ள ஆதாரங்களை அழித்தல், மறைத்தல் மற்றும் கொரோனா தொடர்பாக குற்றம்சாட்டிய அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் காணாமல் போனது போன்றவையும், அந்த வைரஸ் இயற்கையாக உருவாகவில்லை என்பதை நிரூபிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: China, CoronaVirus