கொரோனா தொற்று எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்..? சந்தேகங்களுக்கான விளக்கங்கள்..!

கொரோனா

பாதிக்கப்பட்ட நபருடன் நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளாதபோதும் சிலருக்கு கொரோனா பரவி வரும் சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது.

  • Share this:
கடந்த ஆண்டு COVID-19 என்ற கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி தற்போது பல லட்சம் மக்களின் வாழ்க்கையை தினசரி பாதித்து வருகிறது. COVID-19 வைரஸ் முதன் முதலில் உமிழ்நீர் துளிகளால் பரவுகிறது என்றும் பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது அல்லது தும்மும்போது அவரது மூக்கிலிருந்து வெளியேறும் நீர்துளிகள் மூலம் பரவுகிறது என்றும் கூறப்பட்டது. இது மூக்கு, வாய் மற்றும் கண்கள் வழியாக வைரஸ் ஒருவரின் உடலில் நுழைகிறது.

இதையடுத்து சில சமீபத்திய ஆய்வுகளின்படி, வைரஸ் காற்றின் மூலம் வெகுதூரம் பரவக்கூடும் என்றும், காற்றோட்டம் இல்லாத அலுவலகங்கள், ஏசி வண்டிகள்-பேருந்துகள், வணிக வளாகங்கள் மற்றும் ஏ/சி தியேட்டர்களில் மூடிய காற்றுச்சீரமைக்கப்பட்ட சூழல்களில் வெளியேறும் கொரோனா தொற்று நீர்த்துளிகள் மூலம் பரவக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நபருடன் நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளாதபோதும் சிலருக்கு கொரோனா பரவி வரும் சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இது போன்ற சமயங்களில் ஒரு நோயாளி மற்றும் உயிர் பிழைத்தவரின் மனதில் பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. அவை குறித்து பின்வருமாறு காணலாம்.கொரோனா அறிகுறி தொடர்ந்து இருந்தால் என்ன செய்வது?

கொரோனாவில் இருந்து மீளும் காலம் ஒருவருக்கொருவர் மாறுபடும். ஆனால் அதற்கு கவலைப்பட வேண்டாம். கொரோனாக்கு மேலதிக சிகிச்சைகளை பெற நீங்கள் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

தனிமைப்படுத்துதலை எப்போது கைவிடலாம்?

முதலில் இது குறித்து உங்கள் மருத்துவரிடம் பேச வேண்டும். உங்களுக்கு கொரோனா லேசான அறிகுறி அல்லது அறிகுறியே இல்லாமலும், தொடர்ந்து 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லாமலும் இருந்தால் நீங்கள் பிறருடன் மீண்டும் தொடர்பைத் தொடங்கலாம். அதேபோல நீங்கள் முதலில் அறிகுறிகளை அனுபவித்ததில் இருந்து குறைந்தது 17 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். ஒருவேளை, உங்கள் அறிகுறிகள் தீவிரமடைய தொடங்கும் போது உங்களுக்கு குறைவான நோயெதிர்ப்பு அமைப்பு அல்லது பிற சிறப்பு நிலைமைகள் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மேலதிக சிகிச்சைக்கு செல்லலாம்.எனது அலுவலக கடமையை நான் எப்போது தொடங்கலாம்?

நீங்கள் முதலில் அறிகுறிகளை அனுபவித்ததில் இருந்து குறைந்தது 17 நாட்கள் தனிமையில் இருந்த பிறகு தொடங்கலாம். கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு, உங்களது நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால் நீங்கள் மீண்டும் அலுவலகத்திற்கு செல்லலாம்.

பரிசோதனையில் கொரோனா இருப்பது தெரிந்து பின்னர் அதற்கான நடவடிக்கைகளை எடுத்த பிறகு மீண்டும் கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டுமா?

தனிமைப்படுத்தலை முடித்த அல்லது தனிமையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒருவர் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டார் என்பதே அர்த்தம். இதனால் அவர்கள் மீண்டும் பரிசோதனை எடுக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தாது.கொரோனாவால் நான் மீண்டும் பாதிக்கப்படலாமா?

COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள், அறிகுறிகளைக் கொண்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், ஆன்டிபாடிகள் அதாவது தொற்றுநோய்களுக்கு எதிராக போராடும் புரதங்கள் மற்றும் செல்களை உருவாக்குகிறார்கள். இதனால் ஆரம்ப நோய்த்தொற்றுக்குப் பிறகு கொரோனாவில் இருந்து மீண்டவர்கள், முதல் மூன்று மாதங்களில் மீண்டும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. அதன்பிறகு கூட, குறைந்த அளவிலான ஆன்டிபாடிகள் மூலம் மீண்டும் ஒருவர் கொரோனவால் பாதிக்கப்படாமல் பாதுகாக்க முடியும்.

அறிகுறி இல்லாமல் மக்கள் வைரஸை பரப்ப முடியுமா?

ஆம், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அறிகுறிகள் இல்லாதபோதும் அவர்களால் வைரஸை பரப்ப முடியும். இதனால்தான் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் பரிசோதனை, தனிமைப்படுத்துதல் மற்றும் அவர்களின் நோயின் தீவிரத்தை பொறுத்து மருத்துவ கவனிப்பைப் பெறுவது முக்கியம். இந்த நடவடிக்கைகள் கொரோனா பரிமாற்றத்தை உடைக்கின்றன.கொரோனா பாதித்தவர்களின் நேரடி தொடர்பு இல்லாமலேயே ஒருவர் கடுமையான தொற்றுநோயைப் பெற முடியுமா?

ஆம் இது சத்தியம் என்று கூறுகின்றனர். சமீபத்திய ஆய்வுகளின்படி, கொரோனா சிறிய நீர்த்துளிகள் வழியாக பரவக்கூடும். அவை நீண்ட காலமாக காற்றில் உயிருடன் இருக்கின்றன. போதிய காற்றோட்டம் இல்லாத மூடிய இடங்களில், கொரோனா பாதித்த நபர் அத்தகைய சிறிய நீர்த்துளிகளை காற்றில் வெளியேற்றலாம். அவை காற்றுச்சீரமைத்தல் அமைப்புகளால் அனைத்து பகுதிகளிலும் பரவலாம். எனவே, எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிவது முக்கியம்.

வீட்டில் பாதுகாப்பாக ஏ.சி-யை எவ்வாறு பயன்படுத்தலாம்?

வீட்டில் ஏ.சி.க்களை இயக்கும்போது 24 முதல் 30 டிகிரி செல்ஸியஸ் இடையே வெப்பநிலை பராமரிக்கப்பட வேண்டும். அதேசமயம், ஈரப்பதம் 40% முதல் 70% வரை இருப்பது மிகவும் பொருத்தமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இது நோய்க்கிருமிகளால் ஏற்படும் சிக்கல்களைக் குறைக்கிறது.

காற்றுச்சீரமைப்பாளர்களால் குளிர்ந்த காற்றை மறுசுழற்சி செய்வதற்கு முன்பு, சற்று திறந்த ஜன்னல்கள் வழியாக வெளிப்புற காற்று அறையினுள் உள்நுழைவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத நபர்கள் ஒரே வீட்டில் வாழ்ந்தால் சென்ட்ரலைஸ்டு ஏர் கண்டிஷனிங் உபயோகிப்பதை தவிர்க்கப்பட வேண்டும். தனி ஏர் கண்டிஷனிங் அலகுகள் தனி அறைகளில் பயன்படுத்தப்பட வேண்டும்.ரூம் கூலர்களைப் பயன்படுத்தலாமா?

எவாப்ரேட் ஏர் கூலர் நல்ல காற்றோட்டத்தை உறுதிப்படுத்த வெளியில் இருந்து காற்றை உள்ளிழுக்கின்றன. இந்த எவாப்ரேட்டின் குளிரான தொட்டிகளை சுத்தமாகவும், கிருமி நீக்கம் செய்யவும், அடிக்கடி தண்ணீரை வடிகட்டவும், மீண்டும் நிரப்பவும் வேண்டும். ஈரப்பதமான காற்றை வெளியிட விண்டோஸ் திறந்திருக்க வேண்டும்.
Published by:Sivaranjani E
First published: