இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் ஃபேமிலி டாக்டர்கள் முக்கிய பங்காற்றுவதாக கூறப்படுகிறது,
மகாராஷ்டிரா கோவிட் தடுப்பு குழுவை சேர்ந்த மருத்துவர் ஆஷேஷ் பூம்கர் பேசுகையில், “ குடும்ப மருத்துவர்கள் ஒரு நபரின் உடல்நலனில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மனித வாழ்க்கையும் மருத்துவமும் ஒரு வழிமுறை இல்லை. உதாரணத்திற்கு ஒரு வீட்டில் எல்லோரும் ஒரே உணவைத் தான் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் சிலருக்கு உடல் எடை கூடுகிறது. சிலருக்கு உடல் எடை கூடுவது இல்லை. இதை ஒரு குடும்ப மருத்துவரால் புரிந்துக்கொள்ள முடிகிறது. இதனை வார்த்தைகளிலோ அல்லது புள்ளிவிவரங்களிலோ வைக்க முடியாது. ஆனால் அந்த நபரை பற்றி அவருக்கு இருக்கும் அந்த உணர்வு முக்கியமானது.
இந்த கொரோனா தொற்று காலத்தில் இது மிகவும் முக்கியானது. இணை நோய்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலையை மோசமாக்கும். உயர் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் போன்றவை. உதாரணத்துக்கு ஒரு நோயாளிக்கு நிரீழிவு நோய் இருந்தால். கார்போஹைட்ரேட் அல்லது சர்க்கரை நிறைந்த உணவுகளின் சிறிய தாக்குதல் நோயாளியின் சர்க்கரை அளவை எவ்வாறு மாற்றக்கூடும் என்பதை ஒரு குடும்ப மருத்துவர் நன்கு அறிவார்.
இதுபோன்ற நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மியூகோர்மைகோசிஸ் (Mucormycosis) கருப்பு பூஞ்சை அச்சுறுத்தல் ஏற்படும் போது இதனை ஆரம்பத்திலே கூறலாம். இதன்மூலம் நோயாளிகள் அல்லது உதவியாளர்கள் சரியான நேரத்தில் செயல்பட உதவுவார்கள்.
கோவிட் சிகிச்சைக்கு நோயாளிகளிடையே சரியான விழிப்புணர்வு தேவை. ஓய்வு மிகவும் முக்கியம். முழுமையாக உடலுக்கு ஓய்வு அளிக்க வேண்டும். உங்கள் உடலில் உள்ள ஆக்சிஜனை செலவழிக்காத ஓய்வு. கோவிட் மொத்த ஆட்டமும் ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் பாதுகாப்பை பற்றியது. பொதுவாக நோயாளிகள் மற்ற மருத்துவர்களைவிட குடும்ப மருத்துவர்களை நம்புகிறார்கள்.
ஒரு குடும்ப மருத்துவர் நீங்கள் தேவையில்லாமல் பதற்றமடைவதை தடுப்பார். பதற்றமான சூழலில் நாம் நம்முடைய பொது அறிவினை இழப்போம் இது எல்லாருக்கும் தெரிந்ததுதான். நம்பிக்கையான ஒருவரை பெற வேண்டும். நம்பிக்கையான ஒருவர் இல்லாத சூழலில்தான் தேவையற்ற பதற்றங்கள் ஏற்படுகிறது. இங்கு தான் குடும்ப மருத்துவர் முக்கிய பங்காற்றுகிறார். ஒரு நோயாளியை மருத்துவமனைக்கு மாற்ற வேண்டிய சூழலில் குடும்ப மருத்துவரின் குறிப்புகள் நோயாளியின் எதிர்கால மருத்துவ மேலாண்மை மற்றும் தொடர்ச்சியான பின் தொடர்வுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Corona positive, Corona Vaccine, Covid-19 vaccine, Doctor