ஹோம் /நியூஸ் /கொரோனா /

COVID-19 Deaths in India | தலைநகர் டெல்லியில் கூடுதலாக 10 ஏக்கரில் உடல் தகன, அடக்க இடங்கள்

COVID-19 Deaths in India | தலைநகர் டெல்லியில் கூடுதலாக 10 ஏக்கரில் உடல் தகன, அடக்க இடங்கள்

டெல்லியில் கூடுதல் தகன மேடைகள், அடக்க இடங்கள்.

டெல்லியில் கூடுதல் தகன மேடைகள், அடக்க இடங்கள்.

டெல்லியில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 10 ஏக்கரில் கூடுதலான தகன இடுகாடுகள், உடல்களை அடக்கம் செய்வதற்கென இரண்டு அடக்க இடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஆக்சிஜன் தட்டுப்பாட்டு மரணங்கள், தீவிர கொரோனா நோயாளிகளின் மரணங்கள், மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் சிகிச்சையின்றி இறப்பவர்கள் என்று டெல்லியில் கொரோனா இறப்புகள் அதிகமாகி வருகின்றன. இதனால் உடல் அடக்க இடுகாடுகளில் பிணங்கள் வரிசையாகக் காத்திருக்கும் காட்சி அங்கு நெஞ்சை உலுக்கி வருகின்றன.

  பல மணி நேரங்கள் தாமதமாவதால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இதைச் சமாளிக்க டெல்லியின் வடக்கு மாநகராட்சி நிர்வாகம் தன் நிர்வாகத்தின் கீழ் உள்ள மங்கோல்புரியில் புதிய ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

  அப்பகுதியில் ஐந்து ஏக்கரில் புதிதாக இந்துக்களுக்காகத் தகன மேடைகள் அமைக்கப்படுகின்றன. 3 மற்றும் 2 ஏக்கரில் முறையே முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்காக அடக்கஸ்தலங்களும் அமைகின்றன.

  சூழல் முற்றிலுமாக மாறி இறப்புகள் கூடிவிட்டன. உறவுகளை இழந்ததோடு அல்லாமல் அவர்களுக்கான இறுதிச் சடங்குகளுக்காகவும் பொதுமக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதைப் போக்க மொத்தம் பத்து ஏக்கரில் உடல் எரியூட்டு மேடைகள், 2 உடல் அடக்க இடங்கள் உருவாக்கப்படுகின்றன என்று டெல்லி மாநகராட்சி மேயர் ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

  வடக்கு டெல்லியில் இருக்கும் உடல் எரியூட்டு மேடைகள் போதவில்லை. இதே நிலை டெல்லி தெற்கு மாநகராட்சியிலும் உள்ளது. இங்கும் குடியிருப்புகள் அருகில் இருப்பதால் எனவே கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய இங்கு எதிர்ப்பு நிலவி வருகிறது.

  டெல்லியில் நீதிபதிகள், நீதிமன்ற உயர் அதிகாரிகளுக்காக 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்று கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக டெல்லியில் உள்ள அசோகா நட்சத்திர ஹோட்டலுடன் ப்ரைமஸ் மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.

  இதற்கிடையே, டெல்லிக்கு விநியோகம் செய்யப்படும் ஆக்சிஜன் சப்ளையைக் குறைத்துள்ளது மத்திய அரசு. மேலும் ஐநாக்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை ஆக்சிஜன் உற்பத்தி உத்திரப்பிரதேசத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ஐநாக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

  தற்போது டெல்லிக்கு வழங்கப்பட்டுவந்த 105 மெட்ரிக் டன் ஆக்சிஜன் 80 மெட்ரிக் டன்னாக குறைத்துள்ளதாகக் கூறியுள்ளது.

  மேலும் ஆக்சிஜன் ஏற்றி செல் லும் வாகனங்களும் இடையில் திசைதிருப்பப்படுகின்றன. ஹரியாணாவுக்கு அனுப்பப்பட்ட வாகனங்களை ராஜஸ்தான் கைப்பற்றிக்கொள்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று அங்கு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Corona death, Delhi