வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்..! - ஊழியர்களுக்கு பிசிசிஐ அறிவுறுத்தல்
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிசிசிஐ அலுவலகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்துள்ளது.

பி.சி.சி.ஐ
- News18 Tamil
- Last Updated: March 17, 2020, 9:14 AM IST
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிசிசிஐ அலுவலகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்த்தால் போதுமானது என ட்விட்டரின் சி.இ.ஓ. ஜாக் டோர்சேவின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏற்கனவே அறிவித்தார். மேலும் கூகுள் நிறுவனமும் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் படி அறிவுறுத்தி இருந்தது.
தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் போர்டான பிசிசிஐ, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிசிசிஐ அலுவலகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால் ஊழியர்கள் வீட்டில் இருந்த படியே வேலை பார்க்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மும்பை கிரிக்கெட் சங்கமும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 21-ம் தேதி வரை மூடப்படுவதாக தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்த்தால் போதுமானது என ட்விட்டரின் சி.இ.ஓ. ஜாக் டோர்சேவின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏற்கனவே அறிவித்தார். மேலும் கூகுள் நிறுவனமும் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் படி அறிவுறுத்தி இருந்தது.
தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் போர்டான பிசிசிஐ, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிசிசிஐ அலுவலகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்துள்ளது.