Home » News » Coronavirus-latest-news » COVID 19 ANTIBIOTICS MIGHT BE THE REASON BEHIND RISE OF SUPER GONORRHEA GHTA MG

Covid-19 Antibiotics-இன் அதிகப்படியான பயன்பாடு, Super Gonorrhea பரவலுக்கு காரணமா?

கோவிட் -19 தொற்றுநோய்க்கான கட்டுப்பாடுகள் காரணமாக ட்ராவல் மற்றும் விருந்தோம்பல் துறை (Travel and hospitality sector) மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

Covid-19 Antibiotics-இன் அதிகப்படியான பயன்பாடு, Super Gonorrhea பரவலுக்கு காரணமா?
ஆண்டிபயாட்டிக்
  • Share this:
உலகம் தற்போது கோவிட் -19 தொற்றுநோயை (Covid-19 pandemic) எதிர்த்துப் போராடிவருகிறது, இந்த நெருக்கடியின் காரணமாக, வேறு பல சிக்கல்களும் இப்போது அதிகரித்து வருகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு பலரின் பிஸினஸ்களை பாதித்தது, இதன் விளைவாக, லட்சக்கணக்கானோரின் வேலை வாய்ப்புகளை குறைத்தது. கோவிட் -19 தொற்றுநோய்க்கான கட்டுப்பாடுகள் காரணமாக ட்ராவல் மற்றும் விருந்தோம்பல் துறை (Travel and hospitality sector) மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

2020-ஆம் ஆண்டு முடிவதற்கு சற்று முன்னதாக, 'சூப்பர் கோனோரியா' (‘super gonorrhea’) என்ற புதிய சுகாதார பிரச்சினை பாலியல் ரீதியான தொற்றாக உறுதிப்படுத்தப்படுகிறது. கோனோரியா (Gonorrhea) என்பது பாக்டீரியாவால் (bacteria) ஏற்படும் பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்று ஆகும். 

தி சன்னின் (The Sun) அறிக்கையின் படி, உலக சுகாதார அமைப்பின் (World Health Organization (WHO)) அதிகாரிகள், சூப்பர் கோனோரியா கோவிட் ஆன்டிபயோட்டிக்ஸ்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடும், ஏனெனில் அவற்றின் அதிகப்படியான பயன்பாடு பாக்டீரியாவில் பிறழ்வைத் தூண்டுகிறது (fuelling mutation in the bacteria) என்றனர். 


அவர்களில் பலர் சுயமாகவே பரிந்துரைக்கப்படாத மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர், இதன் விளைவாக பாக்டீரியாவின் பலவீனமான விகாரங்கள் கொல்லப்படுகின்றன மற்றும் வலுவான எதிர்ப்பு ஸ்டெரைன் வகைகள் உருவாகிறது (Stronger resistant strain emerging). Covid -19 பாதிப்புகள், அசித்ரோமைசின்(Azithromycin) போன்ற ஆன்டிபயோட்டிக்ஸ்கள் உடலில் இருந்து நல்ல மற்றும் பலவீனமான பாக்டீரியாக்களைக் கொல்லும். இது வலுவான மற்றும் ஆண்டிபயோடிக் எதிர்ப்பு பாக்டீரியாக்கள் வளர வழிவகை செய்கிறது. 

WHO-இன் ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பு பிரிவின் உதவி இயக்குநர் (Assistant director general of WHO’s antimicrobial resistance division) ஜெனரல் டாக்டர் ஹனன் பால்கி, கோவிட் -19 க்கு சிகிச்சையளிக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்துவது நம் உடலில் ஏற்கனவே இருக்கும் பாக்டீரியாக்களிடையே எதிர்ப்பை உருவாக்கும் என்று கருதுகிறார். அறிக்கையின்படி, கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயன்படுத்தப்படுவது அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

ஆகவே இந்த ரெசிஸ்டென்ஸ் திறனுக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், சூப்பர் கோனோரியா (Super gonorrhea) HIV தொற்றுநோய்களைப் போல் ஐந்து மடங்கு அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளனர். சூப்பர் கோனோரியாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றவர்களுக்கு தொற்றை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்று இங்கிலாந்து ஸ்டார்ட்-அப் பயோட்டாஸ்பெரிக் லிமிடெட் (UK start-up Biotaspheric Limited) நிர்வாகத் தலைவர் கெவின் காக்ஸ் (Kevin Cox) தெரிவித்தார். இது ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பை துரிதப்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
First published: December 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading