கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியீடு... தீவிர பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளோருக்கு 100 சதவீதம் பலனளிப்பதாக தகவல்

கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியீடு... தீவிர பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளோருக்கு 100 சதவீதம் பலனளிப்பதாக தகவல்

கொரோனா தடுப்பூசி

கொரோனா வைரஸ் தொற்றுக்கு கோவாக்சின் தடுப்பூசி 78 சதவீதம் பலன் அளிப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  கோவாக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனையின் தற்காலிக முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசி இரண்டு கட்ட சோதனைக்கு பிறகு கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

  இந்நிலையில், தற்போது மூன்றாம் கட்ட சோதனையின் தற்காலிக ஆய்வு முடிவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் தீவிர அறிகுறி உள்ளவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி 100 சதவீத பலன் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு கோவாக்சின் தடுப்பூசி 78 சதவீதம் பலன் அளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மட்டும் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று ஒருபுறம் வேகமெடுத்து வந்தாலும், மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  கொரோனா முன்கள பணியாளர்களுக்கு மட்டும் ஆரம்பத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசி தற்போது 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
  Published by:Tamilmalar Natarajan
  First published: