COVID-19 Vaccine in India | இந்தியாவின் கோவாக்சின் 617 வகையான கொரோனா வகைகளை வீரியமிழக்கச் செய்கிறது: அமெரிக்க மருத்துவ நிபுணர் டாக்டர் பாஸி கண்டுபிடிப்பு

COVID-19 Vaccine in India | இந்தியாவின் கோவாக்சின் 617 வகையான கொரோனா வகைகளை வீரியமிழக்கச் செய்கிறது: அமெரிக்க மருத்துவ நிபுணர் டாக்டர் பாஸி கண்டுபிடிப்பு

கோவேக்சின்

பாரத் பயோ டெக் மற்றும் இந்திய வைராலஜி கழகமும் சேர்ந்து உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசியான கோவாக்சின் கொரோனா வைரஸின் சுமார் 617 வேரியண்ட் அதாவது வகைமாதிரிகளை வீரியமிழக்கச் செய்யவல்லது என்று அமெரிக்க மருத்துவ நிபுணர் டாக்டர் ஃபாஸி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    டாக்டர் ஆண்டனி ஃபாஸி, டிரம்ப் காலத்திலிருந்தே வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகராகவும் அமெரிக்காவின் பெருந்தொற்று நிபுணராகவும் இருந்து வருகிறார்.

    நேற்று அவர் கான்பரஸ்கால் மூலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    இது தொடர்பாக தினசரி அடிப்படையில் தரவுகள் நமக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சமீபத்திய தரவு கோவிட் 19 கேஸ்களின் குணமடைந்த சீரம் மற்றும் இந்த கோவாக்சினை போட்டுக் கொண்ட மக்களிடமிருந்து வந்ததாகும். இந்த கோவாக்சின் கொரோனாவின் 617 வேரியண்ட்களை அதாவது உருமாறிய வகையினங்களை வீரியமிழக்கச் செய்கிறது.

    எனவே இந்தியாவின் உண்மையான கஷ்டங்களை பார்க்கும் போதும் தடுபூசி போட்டுக்கொள்வதுதான் முக்கியமாக கொரோனாவுக்கு எதிரான ஒரே வழிமுறை என்பதும் தெரியவருகிறது, என்கிறார் டாக்டர் ஃபாஸி.

    தி நியுயார்க் டைம்ஸ் நாளேடு செவ்வாயன்று கூறும்போது , நம் உடலின் எதிர்ப்புச் சக்திக்கு கோவாக்ஸின் ஆண்ட்டி பாடிகளை உற்பத்தி செய்ய கற்றுக் கொடுக்கிறது. இது வைரல் புரோட்டீனுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது, அதாவது செல்களின் மேற்புறத்தை உடைத்துச் செல்லும் ஸ்பைக் புரோட்டீன்களுக்கு தடுப்பு உத்திகளை கோவாக்சின் கற்றுக் கொடுப்பதாக கூறியிருந்தது.

    ஜனவரி 3ம் தேதி கோவாக்ஸின் அவசர நிலை பிரயோகத்துக்காக அனுமதிக்கப்பட்டது. இந்த மருந்தை சோதனை செய்த போது 78% திறன் படைத்தது என கண்டறியப்பட்டது.

    கோவிட் 19 வெள்ளை மாளிகை வினையாற்று ஆலோசகர் டாக்டர் ஆண்டி ஸ்லாவிட் அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாட்டு மையத்தின் அணி ஒன்று கோவாக்ஸினின் இந்த தடுப்பு சக்தியை பயன்படுத்த உதவுமாறு, ஒருங்கிணைப்பு செய்ய இந்தியா புறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும், “தடுப்பூசி உற்பத்தியை இந்தியா துரிதப்படுத்த, அதிகப்படுத்த வாக்சின் இடுபொருட்களை கண்டுப்பிடித்து அனுப்பவுள்ளோம், இது இந்தியாவுக்கான மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

    இந்தியாவின் இந்தத் துயரச் சூழ்நிலையில் உதவிகரமாக இருக்கவே விரும்புகிறோம். நாங்கள் சப்ளைகளையும் உதவிப்பொருட்களையும் வழங்க இருக்கிறோம். சிகிச்சைப்பொருட்கள், பிபிஇ கிட்கள், வெண்டிலேட்டர்கள், வாக்சின் உற்பத்திக்கான மருந்து பொருட்கள், இந்தியாவுடன் சிடிசி நீண்ட நாட்கள் இணைந்து பணியாற்றிய அனுபவம் உள்ளது. இதனால் ஸ்ட்ரைக் டீம் ஒன்றை அனுப்பியுள்ளோம்.

    ஆஸ்ட்ரா ஜெனெகா நிறுவனத்தின் வாக்சின் நல்ல திறன் படைத்தது. உலகின் பல பகுதிகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. எங்களுக்கு பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சனிடமிருந்து போதிய வாக்சின்கள் கிடைக்கின்றன.” என்றார் டாக்டர் ஆண்டி ஸ்லாவிட்.
    Published by:Muthukumar
    First published: